வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

Advertisement

Veetil Selvam Peruga 

அனைவருக்குமே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒவ்வொரு மனிதனும் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் வீட்டில் தங்கவில்லை என்று புலம்புவார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள். செல்வம் பெருகி கொண்டே செல்லும். ஒருபோதும் செல்வ வளம் குறையாது.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்:

Veetil Selvam Peruga 

குறிப்பு -1

முதலில் ஒரு வெள்ளை துணியை எடுத்து கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு சோம்பு, கிராம்பு மற்றும் ஏலக்காய் இவை மூன்றையும் வைத்து, அந்த துணியை ஒரு நூலை வைத்து கட்டிக் கொள்ளுங்கள்.

பின் அந்த துணியை உங்கள் வீட்டில் இருக்கும் பீரோவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். நிச்சயம் வீட்டில் செல்வ வளம் பெருகும். உங்கள் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்.

குறிப்பு -2 

உங்கள் வீட்டு பீரோவில் முகம் பார்க்கும் கண்ணாடியை வையுங்கள். காரணம் கண்ணாடியானது முன் இருக்கும் பொருளை பிரதிபலிக்க கூடியது.

சிறிய அளவின் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பீரோவில் நகை மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து பாருங்கள். வீட்டில் செல்வம் குறையாமல் பெருகி கொண்டே செல்லும். இதுபோல செய்து வருவதால் கடன் பிரச்சனை நீங்கும்.

குறிப்பு -3 

ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி அளவு பச்சரிசி, 5 ஏலக்காய், 2 விரலி மஞ்சள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பட்டை மற்றும் 1 ரூபாய் நாணயம் இந்த 5 பொருட்களையும் மஞ்சள் துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.

இந்த பொருட்களை நுகர்ந்து பார்க்க கூடாது. இந்த மஞ்சள் துணியை உங்கள் வீட்டு பீரோவில் நகை மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து பாருங்கள்.

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். செல்வவளம் பெருகும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement