வளர்க்க கூடாத செடிகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்று ஆன்மிக பதிவை பற்றி தான் பார்க்கப்போகிறோம். எல்லோருடைய வீட்டிலும் அழகிற்கு என்று நிறைய செடிகள் வளர்த்து வருகின்றனர். அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது செடியை சுற்றி பூச்சிகள் வராமல் சுற்றிகரிப்பது இதுபோல பராமரித்து வருகின்றனர். ஆனால் வீட்டில் எல்லாவகையான செடிகளையும் வளர்க்க கூடாது. சில வகையான செடிகள் மட்டும் தான் நன்மை தரும். வீட்டிற்கு கஷ்டத்தையும், தரித்திரத்தையும் தரக்கூடிய செடிகள் மற்றும் மரங்கள் சில இருக்கின்றன. அந்த மாதிரியான செடிகளை வீட்டில் மறந்தும் கூட வைக்கக்கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. மேலும் எந்த மாதிரியான செடிகளை வீட்டில் வைக்கக் கூடாது என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்..!
வீட்டில் வைக்க கூடாத செடிகள்:
வீட்டில் செடி, மரம் வளர்ப்பது நல்லது என்று வளர்த்து வருகின்றனர். ஆனால் வீட்டில் வைக்க கூடாது செடிகள் சில இருக்கிறது என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. வளர்க்க கூடாத செடிகள் என்னவென்று கீழே படித்து தெரிந்துகொள்ளவும்.
- கருவேல மரம்
- மருதாணி செடி
- பருத்தி செடி
- புளிய மரம்
- காய்ந்த மரம்
கருவேல மரம்:
கருவேல மரத்தை ஒரு போதும் உங்களுடைய வீட்டில் மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் வளர்க்க கூடாது. ஏனென்றால் கருவேல மரம் வாஸ்து சாஸ்திரத்தில் அபசமாக கூறப்படுகிறது. வீட்டில் சந்தோசம் இருக்காது மற்றும் தரித்திரத்தை தரும்.
மருதாணி செடி:
மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆனால் மருதாணி செடியை வீட்டில் வளர்க்க கூடாது. இந்த செடியில் தீயசக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே மருதாணி செடி வீட்டிற்கு அருகில் இருந்தால் வீட்டில் அமைதியும், சந்தோஷமும் இருக்காது என்று ஆன்மிகத்தில் கூறுகிறார்கள்.
பருத்தி செடி:
உங்களுடைய வீட்டில் பருத்தி மற்றும் இலவம் பஞ்சு மரம் செடிகளை மறந்தும் நடக்கூடாது. அப்படி மீறி அந்த செடியினை நட்டால் வாழ்க்கையில் வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் தரும் என்று வாஸ்து நிபுணர்கள் கூடுகின்றனர்.
புளிய மரம்:
சமையலுக்கு தேவை என்பதால் புளிய மரத்தை வீட்டை சுற்றி வைக்க கூடாது. அப்படி புளிய மரத்தை வைத்தால் அது உங்களுடைய வாழ்க்கையில் சிக்கல்களையும், குடும்பத்தில் அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் என்று வாஸ்துவில் சொல்லபடுகிறது.
காய்ந்த மரம்:
வீட்டில் செடிகள் அல்லது மரங்கள் காய்ந்து காய்ந்து இருந்தால் அதனை உடனே அகற்றவேண்டும். அகற்றாமல் இருப்பதால் அந்த செடிக்கு எதிர்மறை ஆற்றை நமக்கு அளிக்கிறது. அதனால் வீட்டில் துன்பங்களும், பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |