உங்கள் வீட்டு பீரோவில் இந்த பொருட்களை மட்டும் வைத்துவிடாதீர்கள்..!

veetil vaika kudatha porutkal in tamil

வீட்டு பீரோவில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது..! 

வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ஒரு சிறந்த ஆன்மிக தகவல்தான். அதுவும் நாம் அனைவரின் வீட்டிலேயும் இருக்கக்கூடிய பீரோவில் எந்த பொருட்களை வைக்கலாம் மற்றும் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றித்தான். அனைவரின் வீட்டிலேயும் பீரோ என்பது லட்சுமி தேவி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகும் அப்படிப்பட்ட இடத்தில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வீட்டு பீரோவில் வைக்கக்கூடாத பொருட்கள்:

ஒரு வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கின்றது என்பதற்கு அறிகுறி அந்த வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை பொறுத்து தான். அந்த வீட்டிலுள்ள பூஜை அறை மற்றும் பணம் துணிகளை வைக்கும் இடமான பீரோல் எவ்வளவு சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் உள்ளது.

அப்படிப்பட்ட பீரோவில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

 veetu pirovil vaika kudatha porutkal in tamil

முதலில் நமது வீட்டு பீரோவில் உடைந்த பொருட்களை வைக்கக்கூடாது. உதாரணமாக வீட்டில் உடைந்த எந்த ஒரு கண்ணாடிப் பொருட்களையும் வீட்டு பீரோவில் வைக்கக்கூடாது.

 veetil vaika kudatha porutkal in tamil

அடுத்து தலைமுடியை சரிசெய்ய உதவும் சீப்பை தலைமுடியுடன் நமது வீட்டு பீரோவில் வைக்கக்கூடாது.

 veetu pirovil vaika kudatha porutkal

அடுத்து மிகவும் முக்கியமாக துவைக்காத எந்த ஒரு துணிகளையும் பீரோவில் வைக்கக்கூடாது. நாம் துவைக்காமல் வைக்கக்கூடிய துணிகளில் இருந்து வரக்கூடிய வியர்வை வாசம் நமது வீட்டில் ஒரு எதிர்மறை அதிர்வுகளை உருவாக்கும்.

பின்பு கத்திரிக்கோல், அறுவா, கத்தி போன்ற ஆயுதங்களை நமது வீட்டு பீரோவில் வைக்கக்கூடாது. ஏனென்றால் இவைகள் ஒன்றாக சேர்ந்து இருக்கக்கூடிய பொருட்களை இரண்டாக நறுக்கிவிடுவதுப் போல நமது உறவுகளை நறுக்கிவிடும்.

மேலும் நமது வீட்டிற்கு வரக்கூடிய பணவரவையும் தடுத்து விடும் என்பதால் அவைகளை நமது வீட்டு பீரோவில் வைக்கக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். இவைகளே நமது வீட்டு பீரோவில் வைக்கக்கூடாத பொருட்கள் ஆகும்.

மேலே கூறி பொருட்களை எல்லாம் இது வரை உங்கள் வீட்டு பீரோவில் வைத்திருந்தீர்கள் என்றால் அவற்றை முதலில் எடுத்துவிடுங்கள்.

 pachai karpooram use in tamil

அப்படி இந்த பொருட்களையெல்லாம் வைத்து இருந்ததால் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை அதிர்வுகளை போக்க பச்சை கற்பூரத்தை ஒரு சிறிய துணியில் வைத்து கட்டி நமது பீரோவில் வைப்பதால் இந்த எதிர்மறை அதிர்வுகளை போக்கலாம். மேலும் வீட்டில் மறுபடியும் பணவரவை அதிகரிக்க உதவும்.

அதேபோல இந்த பச்சை கற்பூரத்தை வெள்ளிக்கிழமை தோறும் தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்து வருவதாலும் இந்த எதிர்மறை அதிர்வுகளை போக்கலாம்.  

இதையும் பாருங்கள்=> மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்