வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா..? வளர்க்க கூடாதா..?

Advertisement

Vilvam Tree At Home in Tamil

வணக்கம் அன்பான நெஞ்சங்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா இல்லை வளர்க்க கூடாதா என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சில பேர் வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பார்கள் அதை நாம் பார்த்திருப்போம். வில்வ மரம் பெரும்பாலும் கோவில் பகுதிகளில் தான் காணப்படும். ஒரு சிலர் இந்த வில்வ மரத்தை வீடுகளில் வளர்ப்பார்கள். வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா வளர்க்க கூடாதா என்ற கேள்விகள் பலருக்கு இருக்கும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் வில்வ மரம் வளர்க்கலாமா வளர்க்க கூடாதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வில்வம் மருத்துவம் பயன்கள்

வில்வ மரம்:

வில்வ மரம்

இந்த வில்வ மரம் இந்து மதத்தில் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மரம் சிவபெருமானுக்கு உகந்த மரமாக இருக்கிறது. வில்வ மரம் சிவனின் மறு உருவம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வில்வ மரமானது 3 இலைகளை கொண்டுள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது.

இந்த மூன்று இலைகளிலும் சிவன், பிரம்மன் மற்றும் விஷ்னு என்ற மூன்று கடவுளையும் குறிக்கின்றது.

அதுமட்டுமின்றி இந்த வில்வ மரத்தில் ஒவ்வொரு பாகங்களும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. இந்த மரம் காற்று மாசுபாட்டை தவிர்த்து, நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமான காற்றாக மாற்றி தருகிறது.

வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா..?

வில்வ மரம் சிவபெருமானுக்கு உகந்த மரம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அனைத்து சிவன் கோவில்களிலும் வில்வ மரம் கட்டாயம் இருக்கும். வில்வ மரம் முழுவதும் குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளது.

சிவபெருமானை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தான் வில்வ இலையால் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த மரத்தில் வேர் முதல் காய், பூ, இலை, பழம் மற்றும் பட்டை போன்ற எல்லாம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளன.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்பவர்கள் இந்த வில்வ மரத்தை வீடுகளில் வளர்த்து வரலாம். தங்களையும் தங்கள் மனதையும், உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நினைப்பவர்கள் இந்த வில்வ மரத்தை தாராளமாக வீட்டில் வளர்க்கலாம்.

இந்த வில்வ மரத்தை சுத்தத்துடன் பராமரித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த மரம் ஆன்மீகத்தில் மட்டும் சிறந்த மரம் அல்ல. மருத்துவத்திலும் சிறந்த மரமாக வில்வ மரம் விளங்குகின்றது.

வீட்டில் வில்வ மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் வீடு இல்லாத தோட்டத்தில் வளர்க்கலாம்.

வீட்டில் வில்வ மரம் வளர்க்க கூடாது என்பதற்கான காரணம் என்ன..? 

வில்வ மரம் குளிர்ச்சியை கொண்டுள்ள மரம் என்று உங்களுக்கு தெரியும். இந்த மரம் முழுவதும் குளிர்ச்சியை வெளிப்படுத்துவதால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வந்து அடையும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் வில்வ மரம் இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தீட்டோடு இந்த மரத்தை யாரும் தொடக்கூடாது. இதனால் தான் வில்வ மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்கிறார்கள்.

வில்வ இலை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா..?

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement