காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

Advertisement

காலையில் கண் விழிக்கும்போது பார்க்க வேண்டியவை எவை?

ஆன்மிக நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. ஒவ்வொரு நாளும் காலை எழுதிருக்கும்போதே அந்த நாள் நமக்கு நல்ல நாளாக, மகிழ்ச்சிகரமான நாளாக, இன்பமான நாளாக அமைய வேண்டும் என்று தான் அனைவருமே நினைப்போம். இதற்கு மாற்று கருது என்பது இல்லவே இல்லை. இருந்தாலுமே எல்லாருக்கேம் ஒவ்வொரு நாளுமே சிற்பமானதாக அமைந்துவிடுவது இல்லை. இருப்பினும் நாம் காலை எழுந்தவுடன் எதை முதலில் பார்த்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை நம்மை தேடி வரும் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட இந்த பொருளை வீட்டில் வைத்தால் போதும்..!

விழிப்பு தரிசனம் – Vizhippu Dharisanam in Tamil:

பொதுவாக ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் விழிப்பு தரிசனம் என்று ஒன்று இருக்கிறது. இந்த விழிப்பு தரிசனத்தில் முதலில் நாம் எதை பார்த்தால் அன்றைய நாள் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.

அதாவது நாம் காலை எழுந்தவுடன் முதலில் எதை பார்க்கிறோமோ அதனுடைய ஞாபகம் அன்றைய நாள் முழுவதுமே, நமக்கு இருந்து கொண்டே இருக்கும். அதாவது காலையில் முதலில் பார்க்கும் நிகழ்வை நாம் விழுப்பு தரிசனம் என்று கூறலாம். காலையில் எழுந்து நாம் முதலில் பார்க்கும் காட்சியை பொருத்தே அந்த நாளும் அமைகிறது.

ஆக காலை எழுந்தவுடன் பறந்து விரிந்து கிடக்கும் இயற்கை காட்சிகளை பார்ப்பது சிறந்த விழிப்பு தரிசனமாகும். இருப்பினும் அனைவராலும் இயற்கை சுற்றுச்சூலை பார்த்துவிட முடியாது. ஆக நீங்கள் பார்க்க வேண்டியது உங்கள் உள்ளங்கை.

இதையும் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் 👉👉 வீட்டை விட்டு செல்லும் பொழுது கால் இடறுவது நல்லதா?

உள்ளங்கை:

காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை மனதில் நினைத்துக்கொண்டு இரு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து பின் உள்ளங்கையை பார்த்தால் அந்த நாள் நல்ல இனிமையான வெற்றிகரமான மகிழ்ச்சியான நாளாக அமையும். இதைத்தவிர நாம் வேறு என்ன பார்க்கலாம் என்பதை கீழ் பார்க்கலாம்.

விழிப்பு தரிசனம்:

அதைத் தவிர்த்து நம் வேறு என்ன காட்சிகளையெல்லாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கலாம் என்றால் பூரண கும்பம், கோவில் மணி, பசுமாடு, கன்று குட்டி, நல்ல இயற்கை காட்சிகள், மலர்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

மங்கலம் பொருந்திய பொருட்கள்:

இதை தவிர மங்கலம் பொருந்திய பொருட்கள் அதாவது மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி போன்ற மங்கலம் நிறைந்த அனைத்து விஷயங்களையும் காலையில் எழுந்தவுடன் பார்த்தால் அந்த நாள் நல்ல இனிமையான நாளாகவும் வெற்றிகரமான நாளாகவும் அமையும்.

இஷ்ட தெய்வங்கள்:

மேலும் நமக்கு இஷ்டமான கடவுள்களின் முகங்களையும் கணவன் மனைவியின் முகத்திலும் மனைவி கணவனின் முகத்திலும் குழந்தைகள் பெற்றோர் முகத்திலும் பெற்றோர் குழந்தைகள் முகத்திலும் விழித்தால் அந்த நாள் மிகவும் சிறப்பானதாக அமையும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement