விருச்சிக ராசி பெண்களின் குணம்
வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய ஆன்மீகம் பதிவில் விருச்சிக ராசியில் பிறந்த பெண்களின் குணங்கள் எப்படி இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.
12 ராசியில் பிறந்தவர்களும் ஒவ்வொரு குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். பொதுவாக விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அமைதியானவர்கள் போல இருப்பார்கள்.
ஆனால் கோபம் வந்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லாமல் சட்டேன்று வார்த்தையை விட்டு விடுவார்கள். அந்த வகையில் விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் பாருங்கள் —> விருச்சிக ராசி பலன்கள்
விருச்சிக ராசி பெண்களின் குணம் எப்படி இருக்கும்..?
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிகம் ராசியில் விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் அடங்கும். விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த விஷயத்தை என்றும் மறக்க மாட்டார்கள்.
இந்த ராசி பெண்கள் அவர்களை பாதுகாத்து கொள்ளும் வல்லமை படைத்தவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இயற்கையாகவே இந்த ராசி பெண்கள் மற்றவர்களையும் பாதுகாக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் அதிகளவு கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்களிடம் பிடிவாத குணம் அதிகம் இருக்கும். இவர்கள் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதை பெரியதாக நினைத்து வருந்த மாட்டார்கள்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் சாதிப்பார்கள். இந்த ராசி பெண்கள் தனக்கானது எந்த பொருளாக இருந்தாலும் அதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்களிடம் பேசி ஜெயிப்பது என்பது மிகவும் கடினமான ஓன்று. இந்த ராசியில் பிறந்த பெண்கள் மற்றவர்களின் பேச்சை கேட்க மாட்டார்கள். எல்லாம் தன்னுடைய ஆசை படி நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்த ராசியில் பிறந்த பெண்கள் இளம்வயது சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் வீம்பு பிடித்தவர்களாகவே காணப்படுவார்கள். இவர்களிடம் வைராக்கியமும் மன உறுதியும் அதிகம் காணப்படும்.
இவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் பிறவியிலிருந்தே காணப்படுகிறது. இந்த ராசி பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |