இந்த கனவு மட்டும் உங்களுக்கு வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்..!

Advertisement

What are Good Luck Dreams in Tamil | Mayil Kanavil Vanthal

வாசகர்கள் அனைருக்கும் வணக்கம். இப்பதிவில்  அதிர்ஷ்டம் தரக்கூடிய கனவுகள் எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். கனவு என்பது அனைவருக்கும் வரும். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். அதில் நல்ல கனவுகளும் வரும் கெட்ட கனவுகளும் வரும். ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலனை குறிக்கும். நாம் காணும் கனவுகளில் சில கனவுகள் நிஜமாகவே நடக்கும். அப்படி வரும் கனவுகளில் நமக்கு அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய கனவுகள் என்று ஒரு சில கனவுகள் இருக்கின்றன. அந்த அதிர்ஷ்டம் அளிக்க கூடிய கனவுகள் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம்.

அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய கனவுகள்:

மயில் | Mayil Kanavil Vanthal Enna Nadakum:

 கனவுகளும் அதன் அர்த்தங்களும்

உங்கள் கனவில் மயில் அல்லது மயிலிறகு வந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். அதிலும் குறிப்பாக வெள்ளை மயில் கனவில் வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்றே சொல்லலாம். உங்களுடைய குறிக்கோள், லட்சியம் என எதுவாக இருந்தாலும் நீங்கள் அதை எளிதாக அடையலாம் அல்லது நீங்கள் பார்க்கின்ற வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

 இந்த கனவுகளை எல்லாம் நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கண்டால் நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். காலை 6 மணிக்கு மேல் கண்டால் அந்த கனவில் ஏதும் பலன் இருக்காது. 
இரவில் தூங்கும் போது கெட்ட கனவு வராமல் இருக்க இந்த 2 இலைகள் மட்டும் போதும்

 

வெள்ளைக்குதிரை:

 dream palan in tamil

உங்கள் கனவில் வெள்ளை நிறக்குதிரை வந்தால் அதிர்ஷ்டம். இந்த வெள்ளைக்குதிரை நிற்பது போல் இல்லாமல் ஓடுவது போன்றும், வெள்ளைக்குதிரையின் மேல் நீங்கள் அமர்ந்திருப்பது போன்றும் கனவு உங்களுக்கு வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

வெள்ளை பசு:

உங்கள் கனவில் வெள்ளை நிற பசு வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்க போகிறது ,என்றும் மிகப்பெரிய செல்வ வளம் வரப்போகிறது என்று அர்த்தம். மற்ற நிற பசுக்களும் கனவில் வந்தால் அதிர்ஷ்டம் தான். ஆனால் வெள்ளை நிற பசு வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.

யானை:

 what dream means good luck in tamil

உங்கள் கனவில் யானை உங்களை ஆசிர்வாதம் செய்வது போன்றும், உங்களுக்கு மாலை போடுவது போன்றும் வந்தால் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். அதாவது உங்கள் திருமண வாழ்க்கையிலோ அல்லது உங்கள் வேலைகளிலோ முன்னேற்றம் அடைய போகிறீர்கள் என்பதை குறிக்கும்.

கடல் கனவில் வந்தால் என்ன பலன்

 

நெருப்பு:

நெருப்பு எரிவது போல் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். அந்த அதிர்ஷ்டம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பணமாகவோ, திருமணமாகவோ, வீடாகவோ என எதுவாககவும் இருக்கலாம். அதிலும் உங்களுக்கு தெரியாத ஒரு இடத்தில் நெருப்பு எரிவது போல் கனவு வந்தால் அதிர்ஷ்டம் உங்களுக்கு உடனே நடக்கும் என்பதை குறிக்கிறது.

கோயில் கோபுரம்:

 கனவுகளும் அதன் பலன்களும்

கோயில் கோபுரமோ அல்லது கோபுரத்தில் உள்ள கலசமோ உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு மிக மிகபெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று கூறலாம். இதுவரை வாழ்க்கையில் கண்டிராத அதிர்ஷ்டத்தை நீங்கள் காண்பீர்கள்.

வானவில் கனவில் வந்தால்:

வானவில்லை கடவுளின் கையெழுத்து என்று சொல்வார்கள். அப்படி அந்த வானவில் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று சொல்லாம்.

தங்கம்:

தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்

உங்கள் கனவில் தங்கம் வந்தால் செல்வ மழை பொழியப்போகிறது என்று அர்த்தம். அதாவது நீங்கள் தங்கம் போடுவது போன்றும், வாங்குவது போன்றும் என தங்கம் சம்மந்தப்பட்ட எந்த கனவுகள் வந்தாலும் உங்களுக்கு செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம்.

பல்லி கனவில் வந்தால் என்ன பலன்

 

மஹாலக்ஷ்மி:

மஞ்சள் புடவை கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் மஞ்சள் நிறத்தில் புடவை கட்டி ஏதாவதொரு பெண்ணோ அல்லது வயதானவர்களோ வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது.

மேற்கூறிய கனவுகளில் ஏதாவதொரு கனவு வந்தால் போதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இந்த கனவுகளை நீங்கள் கண்டால் உங்களுடைய குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு உங்களுக்கு வந்த அந்த கனவை யாரிடமும் சொல்லாதீர்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement