குழந்தை பிறக்கும் போது முதலில் கால் வந்தால் நல்லதா கெட்டதா?

Advertisement

What Are The Benefits of Foot First at Birth in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் பயனுள்ள தகவல் தான். சிலருக்கு இந்த கேள்வி இருக்கும். குழந்தை பிறக்கும் போது தலை தான் வெளியில் வரவேண்டும் ஆனால் கால் வெளியே வந்து விட்டது என்று சொல்லி பெரியவர்கள் பேசிருப்பார்கள். இல்லையென்றால் படங்களில் பேசுவதை கேட்டிருப்போம் அல்லாவா..! அது நல்லதா இல்லை கெட்டதா? வாங்க இந்த பதிவை படித்து தெரிந்துகொள்வோம்..!

குழந்தை பிறக்கும் போது முதலில் கால் வந்தால் நல்லதா கெட்டதா?

ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறப்பு என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். அவ்வாறு குழந்தை பிறக்கும் போது முதலில் தலை வரும் அதன் பின் உடல் முழுவதும் வந்துவிடும் இந்து இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் ஆனால்.

ஒரு சிலருக்கு குழந்தை பிறகும் போதே கால் வெளியே வரும் அதன் பின் உடல் தலை வரும். இதை பார்த்துவிட்டு குழந்தை பிறக்கும் போதே பிரச்சனை தான் என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஆன்மீக ரீதியாக சொல்வது என்னவென்றால் கால் முதலில் வெளியில் வந்தால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளவும்  👉👉 குழந்தைகள் கையில் வசம்பு கட்டுவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

 ◊ அந்த குழந்தைக்கு இயற்கையாகவே ஒரு அற்புத சக்தி இருக்கும். அற்புத சக்தி என்றால் அது ஒரு விதமான ஆன்மீக சக்தியாகும் இருக்கலாம், அறிவியல் சக்தியாகவும் இருக்கலாம். சக்தி என்றால் எந்த விஷயத்திலும் ஆர்வம் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அதேபோல் அந்த விஷயத்தில் ஞானம் அதிகமாக இருக்கும். 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். அதேபோல் தனியாக தெரியக்கூடியவராக இருப்பீர்கள். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெரிய கம்பெனியில் பணியாற்றி வருகிறார் என்றால் அந்த பணியில் இவர் தனித்துவமாக இருப்பார்கள்.

இவர்கள் எங்கு கால் பதித்தாலும் அது நல்ல வெற்றியை அடையும். அந்த அளவிற்கு இவர்களிடம் ஒரு நல்ல ஆற்றல் நிறைந்திருக்கும்.

ஒரு வேலையில் இவர்கள் சேர்ந்தார்கள் என்றால் மிகவும் எளிமையாக புரிந்துகொள்வார்கள். அதனுடைய நுணுக்கத்தை தெரிந்துகொள்வார்கள்.

இரண்டு விதமான மக்கள் இருப்பார்கள் ஒன்று புத்தி மற்றொன்று சுயபுத்தி அதில் இந்த நபருக்கு சுயபுத்தி சொல்வதை மட்டுமே செய்வார்கள்.

மேலும் இவர்களுக்கு மந்திர தந்திரத்தின் மீது அதிக ஞானம் உள்ளது. இவர்களுக்கு வைத்தியதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பார்கள்.

முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் இவர்களால் முடியாது என்று எதுவும் இல்லை. அந்த வார்த்தையை சொல்லமறுப்பார்கள். எதுவாக இருந்தாலும் அதனை தெரிந்துகொண்டு தான் மற்றவர்களுக்கு சொல்வார்கள்.

பயம் என்ற ஒன்று இவருக்கு கிடையாது. ஏதுவாயிலும் அதனை செய்வதையும் மிகவும் தையிரியசாலியாக இருப்பார்கள்.

நடக்க போவதை முன்கூட்டிய கணிக்கக்கூடிய திறமையும் இவருக்குள் இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு தீமை செய்ய மாட்டார்கள். இவர்கள் பிறப்பதில் அனைவருக்கும் எதோ ஒரு விதத்தில் நன்மை இருக்கும் நாட்டிற்கும் சரி வீட்டிற்கும் சரி நல்லது தான்.
ஆகவே இந்த மாதிரி குழந்தை பிறந்தால் அது குழந்தைகளுக்கும் சரி குழந்தையை சார்ந்தவர்களுக்கு நன்மை தான்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  ராகு எமகண்டத்தில் குழந்தை பிறந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement