செவ்வாய் கிழமை பெண் குழந்தை பிறந்தால் என்ன பலன்
பிள்ளை பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். அதை விட கொடுமையானது என்னவென்றால் இப்போது குழந்தை பிறக்கும் நேரத்தை கூட குறித்து வைத்து தான் பிள்ளையை பிறக்க வைக்கிறார்கள்.
அதாவது எந்த நேரத்தில் ஆப்ரேசன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள் என்பதையும் முன்கூட்டியே குறித்து வைத்து விடுகிறார்கள். மேலும் பெரியவர்கள் இந்த கிழமையில் பிறந்தால் நல்லது இந்த கிழமையில் பிறந்தால் கெட்டது என்று பல விஷயம் சொல்கிறார்கள். அதில் முக்கியமாக சொல்வது செவ்வாய் கிழமையில் பெண் குழந்தை பிறக்க கூடாது. அப்படி பிறந்தால் செவ்வாய் தோஷம் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி செவ்வாய்கிழமை பிறந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..?
Sevvai Kilamai Pen Kulanthai Piranthal:
செவ்வாய்கிழமை அன்று பிறந்தவர்கள் சண்டையிடம் தன்மை கொண்டவர்கள். மன உறுதி, தைரியம் என மனப்பாங்கு கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களை வழி நடத்திதான் வெல்ல வேண்டும் என்று நினைக்கும் குணம் கொண்டவர்கள். எப்போதும் உற்சாகம் கொண்டவராக இருப்பார்கள்.
இவர்கள் அதிக ஆற்றல் உடையவராக இருப்பார்கள். இவர்கள் சவாலை நிரூபிக்கவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்கள் பின்பு வரும் வாழ்க்கையை பற்றி அதிகம் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். தெரியாத விஷயத்தை பற்றி ஆராய்ந்து கற்றுகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
தொழில் செய்பவராக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பது தொழிலாக இருக்கும். தொழிலை அதிகம் நேசிப்பீர்கள். வங்கி மற்றும் நிதி போன்ற பணம் தொடர்பான துறைகளில் பணியாற்றுவதை நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள். எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும் அதில் நாம் வெற்றி பெற அதிகம் உழைக்க தயாராக இருப்பார்கள். தொழிலை பாதிக்கும் அளவிற்கு மற்றவர்கள் நடந்துகொண்டால் அவர்களிடம் உங்களுடைய கடுமையான குணத்தை காட்டுவீர்கள்.
பெரும்பாலான நேரத்தில் அதிகம் யோசனையில் இருப்பீர்கள். அதனை அப்படியே உங்கள் துணையுடன் காட்டுவீர்கள். ஆகவே மற்றவர்களிடம் பேசும் போது யோசித்து பேசுவது நல்லது.
வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |