சூரிய கிரகணம் அன்று செய்ய கூடாதவை
இன்றைய பதிவில் சூரிய கிரகணம் அன்று செய்ய கூடாத செயல்கள் என்ன என்று தான் தெரிந்து கொள்வோம். முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30-ம் தேதி நிகழ்ந்தது. அடுத்த சூரிய கிரகணம் வருகின்ற 25– ம் தேதி செவ்வாய்க்கிழமை நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் செய்ய கூடாத செயல்களும், செய்ய கூடிய செயல்களும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ 2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அக்டோபர் 25 கடும் அவஸ்தைகளை சந்திக்க போகும் ராசிகள் யார் தெரியுமா?
சூரிய கிரகணம் என்றால் என்ன.?
சூரிய கிரகணம் என்பது ஒரு அறிய வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து அதனுடைய கதிர்கள் பூமியில் படுவதை தடுக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் அன்று செய்ய கூடாதவை:
சூரிய கிரகணம் இம்மாதம் 25- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 02.28 PM மணி முதல் மாலை 06.32 PM வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த நேரத்தில் என்ன செய்ய கூடாது, என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சூரிய கிரகணம் நிகழும் பொழுது உணவு சாப்பிட கூடாது. உங்களால் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் தண்ணீர் மற்றும் ஜூஸாக எடுத்து கொள்ளலாம்.
மேலும் கிரகணத்தின் போது வெளியில் செல்ல வேண்டாம். கிரகணத்திற்குள் குளித்து முடித்திட வேண்டும். இல்லையென்றால் கிரகணத்திற்கு பிறகு குளியுங்கள்.
மேலும் கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. நகத்தை வெட்ட கூடாது. முக்கியமானது சூரிய கிரகணம் நிகழும் போது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெளியில் வர கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர், இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிரச்சனை ஏற்படுமாம்.
எந்த வேலைகளும் செய்யமால் அமைதியாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணம் அன்று செய்ய வேண்டியவை:
சூரிய கிரகணம் போது வீட்டில் உள்ள அனைவரும் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரியுங்கள். இல்லை எனக்கு மந்திரங்கள் தெரியாது என்றால் தியானம் செய்யுங்கள். இப்படி செய்வதினால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
நீங்கள் சமைத்து வைத்த பொருட்களில் தர்ப்பை புல்லை சிறிதளவு போட்டு வையுங்கள்.
கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்யுங்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |