செல்வ வளம் பெருக அரிசி பானையில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!

what to do to increase wealth in tamil

செல்வ வளம் பெருக என்ன செய்ய வேண்டும்..! 

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய ஆன்மீகம் பதிவில் செல்வ வளம் பெருக அரிசி பானையில் எந்த பொருள் வைக்க வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த கால கட்டத்தில் ஆன்மீகத்தின் மேல் பற்று கொண்டவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். வீட்டில் பணக் கஷ்டம் தீர்ந்து செல்வ வளம் பெருக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

செல்வவளம் பெருக முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

பணக் கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும்..? 

அனைவருமே கஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். என்ன செய்தாலும் வீட்டில் இருக்கும் பணக் கஷ்டம் தீர வில்லையா..? அப்போ வீட்டில் பணக் கஷ்டம் தீர இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பின் பற்றி வந்த முறைகளில் இதுவும் ஓன்று. நம் சமையலறையில் இருக்க கூடிய நாம் உண்ணும் உணவு பொருட்களில் முதன்மையான ஒரு உணவு பொருள் அரிசி.

இந்த அரிசியை நாம் இப்பொழுது பல பாத்திரங்களில் சேமித்து வைக்கிறோம். ஆனால் அந்த கால கட்டத்தில் அரிசியை மண் பானையில் தான் சேமித்து வைத்திருந்தார்கள்.

அரிசியை மண் பானையில் சேமித்து வைப்பதால் வீட்டில் லட்சமி கடாட்சம் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், அரிசி பானையில் நகைகள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றை மறைத்து வைத்திருந்தனர்.

அதனால் அவர்கள் செல்வவளம் நிறைந்தவர்களாக இருந்தனர். நீங்களும் அரிசி பானையில் நகைகள் மற்றும் நாணயங்களை மறைத்து வையுங்கள்.

 அரிசி பானையில் இந்த பொருளை வையுங்கள்:

வெள்ளிக் கிழமையில் விளக்கேற்றும் நேரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் 1 ரூபாய் நாணயத்தை அரிசி பானையில் போட்டு புதைத்து வைக்க வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் தீரும். செல்வ வளம் பெருகும்.

அதே உங்கள் வீட்டில் ஏதும் சிறிய குண்டுமணி அளவில் தங்கம் இருந்தாலும் அதையும் அரிசி பானையில் புதைத்து வைக்கலாம். இதனால் வீட்டில் சேராத செல்வமும் சேரும். பணக் கஷ்டம் தீரும். வறுமை நீங்கும். மகாலட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்