செல்வவளம் பெருக முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

Advertisement

கண்ணாடி வைக்கும் பலன்..! 

வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் நம் வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் மற்றும்  எந்த இடத்தில் கண்ணாடி வைத்தால் நல்லது நடக்கும் என்பதை பற்றி பார்க்க போகிறோம். அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய ஒரு பொருள் தான் கண்ணாடி.

நம்மை நமக்கே காட்டக்கூடிய ஒரு சக்தியை கொண்டது தான் கண்ணாடி. நம்மிடம் இருக்கும் குறையை நமக்கு காட்டுவது தான் கண்ணாடி. கண்ணாடி முன் நாம் என்ன செய்தாலும் அதை திரும்பவும் நம்மிடம் காட்டும். கண்ணாடி இல்லாத வீடுகளே கிடையாது. இந்த கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் மாட்ட வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வீட்டில் பணம், காசு புழங்க இதை மட்டும் செய்து பாருங்கள்..!

கண்ணாடி எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?  

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து முறை உண்டு. நாம் எங்கு சென்றாலும் முதலில் கண்ணாடியை பார்த்து விட்டு தான் வெளியில் செல்வோம். மங்களகரமான பொருட்களுடன் சேர்த்து கொடுக்கப்படும் ஒரு பொருள் தான் கண்ணாடி.

விசேஷப் பொருட்களுடன் இந்த கண்ணாடியும் வைத்து கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். கண்ணாடி என்பது நாம் முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் என்று நினைப்போம். ஆனால் கண்ணாடி வைக்கும் இடத்தை பொறுத்து அதற்கான பலனை கூறலாம்.

இந்த கண்ணாடியை தெய்வீக அம்சம் கொண்டது என்றும் கூறலாம். வீட்டில் இருக்கும் கண்ணாடி அந்த வீட்டின் அதிர்வுகளை உள்வாங்கும் என்று கூறுகிறார்கள். அதனால் தான் நாம் தூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்த்து விட்டு கண்ணாடி பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் என்ன பலன்..? 

வீட்டின் பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

நீங்கள் ஆரத்தி எடுக்கும் போது அது அந்த கண்ணாடியில் தெரிய வேண்டும். இதுபோல நீங்கள் எடுக்கும் ஆரத்தி கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது அந்த இறைவனின் அருள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

இதனால் உங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி நன்மை உண்டாகும். நல்ல விஷயங்கள் வீட்டில் உண்டாகும். பணக்கஷ்டம் நீங்கும்.

நகை வைக்கும் இடத்தில் கண்ணாடி வைக்கலாமா..?

ஒரு சிறிய கண்ணாடியை நகை வைக்கும் இடங்களில் வைக்கலாம். இதனால் செல்வவளம் பெருகும் என்று கூறுவார்கள். அதனால் நீங்கள் நகைவைக்கும் இடமான பீரோவில் ஒரு சிறிய கண்ணாடி வைத்து வரலாம். இதனால் வீட்டில் உள்ள கஷ்டம் எல்லாம் நீங்கி நன்மை உண்டாகும்.

வீட்டில் பணம் மழை பொழிய வேண்டுமா அப்போ இதை மட்டும் செய்ங்க..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement