Which Zodiac Sign Has the Biggest Temper
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் அன்பு, பாசம், கருணை, இரக்கம், போன்ற குணங்களில் கோபமும் ஒன்று. ஆனால் இந்த கோபம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். கோவத்தை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவார்கள். மனிதர்களின் குணத்தை எப்படி ஜோதிடத்தில் கணித்து வைத்திருக்கர்களோ அது போல கோபத்தையும் கணித்து வைத்திருக்கிறார்கள். சில ராசிகள் அதிகமாக கோபம் உடையவர்களாக இருப்பார்கள். உங்களுடைய நண்பர் கோபம் அடைந்தால் அந்த இடத்தில் நீங்கள் விட்டு கொடுத்து செல்வீர்கள். அது போல சில ராசிகள் அதிகம் கோபப்படும் குணம் உடையவர்களாக இருந்தால் அவர்களிடம் சற்று தூரமாகவே இருக்கலாம் அல்லவா.! உங்களுக்கும் உதவும் வகையில் அதிகமாக கோபப்படும் ராசிகள் எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்கள் கொஞ்சம் கூட பொறுமை கிடையாது. அவர்கள் சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்பட கூடியவர்களாக இருப்பார்கள். மேஷம் ராசிக்காரர்கள் இன்னொருவருடன் சாதாரணமாக பேசும் போதே கோபம் நிலையில் தான் பேசுவார்கள்.
இந்த ராசிக்கறாங்க நல்ல இதயம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா..
கடகம்:
கடகம் ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பேசி கொண்டிருக்கும் போது விளையாட்டாக ஒரு வார்த்தை சொன்னால் கூட அதை விளையாட்டாக எடுத்து கொள்ளமால் கோபத்துடன் பேசுவார்கள். எடுத்துக்காட்டாக இவர்கள் வீட்டில் ஏதவாது ஒரு சுப நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அதற்கு நண்பரை அழைக்கிறார். நண்பர் வரவில்லை என்றால் அதற்கு அவரிடம் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் சிறிய விஷயத்துக்கு கூட ரொம்ப கஷ்டப்படுவார்கள். எடுத்துக்காட்டாக சிம்ம ராசிக்காரரிடம் நண்பர்கள் கடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த கடனை திருப்பி கொடுக்க கால தாமதம் ஏற்பட்டால் நண்பர் என்று பார்க்காமல் கோபமாக பேசி விடுவார்கள். எந்த இடமாக இருந்தாலும் கோபத்தை வெளிப்படுத்துவிடுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் ரொம்ப உறுதியான மனம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் நினைக்கின்ற செயல்கள் நடக்காத போது பக்கத்தில் யார் இருந்தாலும் அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துவிடுவார்கள். அதனால் இந்த ராசிக்காரர்கள் கோபம் வர கூடிய நிலை இருந்தால் இவர்களின் பக்கத்தில் இருக்கும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |