சூரிய கிரகணம் 2023
பொதுவாக சூரிய கிரகணம் என்று சொன்னால் பயந்து போவார்கள். ஏனென்றால் அதில் நன்மை மற்றும் தீமை உள்ளது. இதனை ஜோதிடம் அல்லது அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இரண்டாவது சூரிய கிரகணமாக வர உள்ளது. இந்த சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதியில் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது சில ராசிக்காரர்களை நேரடியாக பாதிக்க போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
கன்னி :
கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாவது சூரிய கிரகணம் சரியாக அமையப்போவது இல்லை. அதனால் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் போது பல முறை யோசனை செய்த பிறகு ஈடுபட வேண்டும். உங்களின் நண்பர்கள் அல்லது தோழிகளிடம் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி அளவுக்கு மீறிய செலவை தவிர்ப்பது நல்லது.
இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்கள் உஷாராக இருக்கணும்…!
துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டாவது சூரிய கிரகணத்தால் பல தீமைகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் தேவையில்லாமல் மன அழுத்தம் எற்படும். அதனால் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க இறைவனை வழிபடுவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அது போல எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத செலவுகளை ஏற்படும். முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும், அதை மீறி செய்வதன் மூலம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அது போல பணம் பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டாவது சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த கால கட்டத்தின் போது பணம் இழப்பு, அவதூறு, பொருட்கள் நஷ்டம் போன்றவை நடக்க வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒவ்வொரு செயலிலும் கவனமாக செய்வது நல்லது.
சூரிய கிரகணம் அன்று இந்த செயல்களை மறந்தும் செய்து விடாதீர்கள்
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் இரண்டாவது சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமாக அமையப்போவதில்லை. இந்த நேரத்தில் உங்களுடன் நெருக்கமான நண்பர்கள் கூட உங்களுக்கு துரோகம் அளித்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் உங்கள் உறவினர்கள் உங்களை பல்வேறு சிக்கலில் சிக்க வைப்பார்கள், அதனால் பார்த்து நிதானமாக நடந்து கொள்வது நல்லது. வரவுக்கு தகுந்த செலவு செய்வது நல்லது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |