தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? அப்படி ஏற்றவில்லை என்றால் என்ன ஆகும்

yama deepam etrum murai

எம தீபம் என்றால் என்ன?

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் எமதீபம் என்றால் என்ன என்பது பற்றி தான் இந்த பதிவு. பொதுவாக தீபம் ஏற்றுவது மிகவும் குறைவு காரணம் இந்த எம தீபம் ஏற்றுவதை சரியாக செய்யவில்லையென்றால் நல்ல பலன்கள் கிடைக்கவில்லையென்றால் கஷ்டங்களை அளிக்கமால்  இருந்தால் மிகவும் நல்லது ஆனால் இந்த எம தீபத்தை சரியாக செய்யவில்லையென்றால் நல்ல பலனை விட கேட்ட பலன்கள் தான் அதிகம் கிடைக்கும்.

எம தீபம் என்றால் என்ன?

நம்முடைய முன்னோர்கள் புரட்டாசி மாதம் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு  முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசையில் திதி கொடுத்து வருகிறோம். எமோலோகத்திலிருந்து வந்த முன்னோர்களுக்கு திரும்பி செலவதற்கு வழிகாட்டுவது இந்த எம தீபம் மட்டுமே. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

அதேபோல் இந்த தீபத்திற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்த தீபத்தை சனிபகவான் மற்றும் எமதர்ம ராஜ என இருவருக்கும் இந்த தீபத்தை ஏற்றுவார்கள். அவர்களுடைய கோவமான பார்வை நம்முடைய குடும்பத்தின் மீது பட்டால் நமக்கு கஷ்டம் ஏற்படலாம், அதனால் அவர்களை மகிழ்விக்கும் விதத்திலும் இந்த எம தீபத்தை ஏற்றுகிறார்கள்.

எம தீபம் ஏற்றும் முறை:

எம தீபம்

இந்த தீபத்தை வீட்டுற்குள் ஏற்றக்கூடாது. ரோட்டிலும் ஏற்றக்கூடாது. நீங்கள் இந்த தீபத்தை வீட்டில் வெளியில் வாசல் இருக்கும் அந்த நிலை வாசல் படியில் ஏற்றலாம். அப்படி ஏற்றும் விளக்கு தெற்கு திசையை நோக்கித்தான் ஏற்ற வேண்டும். அந்த விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்களை அனைத்தையுமே வீட்டிற்குள் மறுமுறை எடுத்து சென்று பயன்படுத்த கூடாது.

வட நாட்டில் விளக்குகளை கோதுமை மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றுவார்கள். ஆனால் அது தேவையில்லை மணலால் செய்யப்பட்ட விளக்குகளை அதாவது அகல் விளக்கை ஏற்றலாம். அந்த விளக்கில் நல்லஎண்ணெய் ஊற்றவேண்டும்.

அதேபோல் ஒரு வீட்டிற்கு ஒரு விளக்குதான் ஏற்றவேண்டும். பெரிய அளவில் தான் ஏற்றவேண்டும் என்றால் 8 தீபம் ஏற்றலாம் எட்டு திசையையும் நோக்கி ஏற்றவும்.

இந்த தீபம் ஏற்றும் போதும் விளக்கிற்கு நேரில் நின்று ஏற்றக்கூடாது. முதலில் விளக்கை வைத்து விட்டு அதனை சுற்றி நறுமணம் தரும் மலர்களை வைக்கவும். பின் அதன் மீது கோதுமை தானியம் மேல் தூவி விடவும். அதன் பிறகு மஞ்சள் தூள் தூவி விடவும். பின்பு கடைசியில் விளக்கு பின் புறம் நின்று விளக்கை ஏற்றவேண்டும். இந்த தீபம் ஏற்று போது விளக்கு முன்பு யாரும் நிற்க கூடாது. முக்கியமாக குழந்தைகைளை முன்பு வர கூடாது.

பின்பும் திரியை எடுத்துவிடுவதாக இருந்தாலும் அதனையும் பின் புறத்தில் நின்று தான் செய்ய வேண்டும். எக்காரணத்தினாலும் விளக்கை கையாலோ அல்லது ஊதியோ அணைக்க கூடாது. அது தானாகவே அணைய வேண்டும்.

இந்த தீபாவளிக்கு முதல் நாள் மாலை 5.45 மணி முதல் 1 மணி நேரம் எறிந்தாள் போதும். இரவு முழுவதும் எறியவேண்டும் என்றால் இரவு எண்ணெய் ஊற்றி விட்டு தூக்கலாம்.

எம தீபம் யார் ஏற்ற வேண்டும்? | யார் ஏற்றக்கூடாது?

இந்த தீபத்தை பெண்கள் தான் ஏற்றவேண்டும் என்று ஒரு கட்டாயமம் இல்லை ஆண்களும் ஏற்றலாம்.

அதேபோல் கருவுற்ற காலமாக இருந்தால் அந்த பெண் 3 மாதம் இந்த தீபம் ஏற்றக்கூடாது.

அதேபோல் 5 மாதத்திற்கு மேல் குழந்தை பெரும் வரை இந்த பெண்கள் ஏற்றக்கூடாது.

கர்ப்பமாக இருப்பவர்கள் 4 மாதம் உள்ளவர்கள் மட்டுமே இந்த தீபத்தை ஏற்றலாம்.

உடலில் வலி உள்ளவர்கள் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. உடலில் ஏதேனும் காயம் அடைந்தவர்கள் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. அதேபோல் நோய் உள்ளவர்கள் இந்த தீபத்தை கண்டிப்பாக ஏற்றக்கூடாது.

திருமணம் ஆகிய 6 மாதம் காலம் தான் ஆகிறது என்றால் அவர்கள் இருவருமே இந்த தீபத்தை ஏற்றக்கூடாது.

குழந்தை பிறந்து 30 நாட்களுக்கு பிறகு தான் இந்த தீபத்தை ஏற்றவேண்டும்.

முக்கியமாக இந்த தீபத்தை ஏற்பவர்கள் தாய் தந்தையை அவமதித்து இருக்கிற பெண்களோ, ஆண்கள் இருவருமே இந்த தீபத்தை ஏற்றக்கூடாது.

இந்த நியதிகளுக்கு ஏற்றவர்கள் மட்டுமே இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்