Advertisement
Your Forehead Reveals Your Personality in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஒருவரின் நெற்றியை வைத்து அவர்கள் எப்படிப்பட்ட குணங்களை உடையவர்கள், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். பொதுவாகவே எல்லாருக்கும் ஒரே மாதிரியான நெற்றிகள் இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். உதாரணத்திற்கு பெரிய நெற்றி, வளைந்த நெற்றி, எம் வடிவ நெற்றி, குறுகிய நெற்றி, போன்ற வடிவங்களில் இருக்கும். அவர்களின் ஆளுமை பண்புகள் எப்படி இருக்கும் தெரியுமா.! வாங்க தெரிந்துகொள்ளலாம்.
கால் விரல் ஜோதிடம் |
பெரிய நெற்றியின் ஆளுமை | Big forehead personality in tamil
- பெரிய நெற்றியை உடையவர்கள் பல வகையான வேலைகளை செய்வார்கள். ஒழுக்கமாக இருப்பதிலும் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதிலும் வல்லவர்கள்.
- இவர்கள் சமநிலையான அணுகுமுறையுடன் வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்பவர்கள். இவர்கள் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் இருப்பார்கள்.
- இவர்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சிந்தனைகளுடன் இருப்பதால் கடைசில் வெற்றியை நோக்கித்தான் செயல்படும்.
- இவர்களின் திறமையால் இவர்கள் வாழ்க்கை திருப்தியாக இருக்கும். இவர்கள் எதையும் சுலபமாக கற்றுக்கொள்பவர்கள்.
- அதிகமாக முதலீடுகளை சம்பாதிக்கும் தொழிகளில் இருப்பார்கள். இவர்கள் நல்ல சமூக வாழ்க்கையை அனுபவிக்க கூடியவராக இருப்பார்கள்.
- இவர்களுக்கு கோவம் அதிகமாக வராது அப்படி வந்தால் அவர்களின் கோவத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
குறுகிய நெற்றியின் ஆளுமை | Narrow forehead personality in tamil
- குறுகிய நெற்றியை உடைய இவர்கள் சொந்தமான நிறுவனத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தனித்துவமான ஆளுமை பண்புகளை கொண்டவர்கள்.
- இவர்கள் மூளை சொல்வதை கேட்காமல் மனம் என்ன சொல்கிறது என்று செயல்படுவார்கள். தாராளமான மனப்பான்மைகளை கொண்டவர்கள்.
- இவர்களுக்கு எது உற்சாகம் தரக்கூடியதோ அதை அடைவதற்காக அதிகமாக முயற்சிகளை எடுப்பார்கள்.
- இவர்கள் பிறருக்கு உதவி செய்வதை அதிகமாக நேசிப்பார்கள், அதில் அதிகமாக மகிழ்ச்சி அடைவார்கள்.
- இவர்கள் பலரிடம் அன்பாக இருந்து வந்தாலும் கவனமாக இருப்பதில்லை. இவர்களின் விதிகள் மற்றும் மதிப்புகளின் படி வாழ்வார்கள்.
- இவர்கள் ஒரு வேலை செய்வதில் எதற்கும் அச்சம் இல்லாமல் நம்பிக்கையுடனும், திட்டமிட்டும் செயல்படுவார்கள்.
- பல விஷங்களை சிந்திப்பதை விட உணர்ச்சிகளை அதிகமாக பின்பற்றும் திறமைகளை உடையவர்கள்.
வளைந்த நெற்றியின் ஆளுமை | curved forehead personality in tamil
- வளைந்த நெற்றியை உடைய இவர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல பண்புகளையும் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் ஒரு நம்பிக்கையான நபராக இருப்பார்கள்.
- இவர்களுக்கு மக்களின் வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும் திறமைகள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
- இவர்கள் எல்லாரிடமும் எளிதாக பழகுவார்கள், அதிகமான நட்புகளை உடையவராக இருப்பார்கள்.
- இவர்கள் எப்போதும் எல்லாரிடமும் நேர்மறையாக இருப்பார்கள். அதோடு பேசும் பொழுது வார்த்தைகளில் அதிகமான கட்டுப்பாடுகளும் இருக்கும்.
- இவர்கள் கனவுகளை அடைவதற்கும் இலக்குகளை அடைவதற்கும் மிகவும் பாடுபடுவார்கள்.
- இவர்கள் எந்த ஒரு செயல் செய்தலும் அதில் கருணை உணர்வுகள் அதிகமாக இருக்கும்.
- கடுமையான சூழ்நிலைகளில் கூட திறமையாக இருப்பார்கள். இவர்கள் அதிகமான புத்திசாலி திறனை கொண்டிருப்பார்கள்.
எம் வடிவ நெற்றியின் ஆளுமை| M shaped orehead personality in tamil
- எம் வடிவ நெற்றியை உடைய இவர்கள் கலை பொருட்கள் தயாரிப்பது அல்லது பல்துறை நபராக இருப்பார்கள்.
- இவர்கள் பாரம்பரியமான நவீன, பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி கலவையை இவர்கள் அழகாக உருவாகும் திறமைகளை உடையவர்கள்.
- இவர்களுக்கு அதிகமான கற்பனை திறன்களையும் உடையவர்கள். எந்த ஒரு செயலிலும் கருணையுடன் செயல்படுவார்கள்.
- பிறரிடம் பேசும் பொழுது நல்ல முறைகளுடன் செயல்படுவார்கள். இவர்கள் அதிகமான படைப்பாற்றலை உடையவர்கள்.
- இவர்கள் செய்யும் சில காரிகளில் இவர்களின் படைப்புகள் அதிகம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
- இவர்கள் ஒரு சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இவர்கள் அதிகமாக கோவப்படும் குணத்தை உடைவர்.
- பொதுவாகவே இவர்கள் எல்லாரிடமும் அன்பாகவும், மரியாதையாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் அதிகமாக அக்கறையுடன் இருப்பார்கள்.
- இவர்கள் தனிப்பட்ட துறைகளில் இருந்தால் இவர்களின் திறமைகளை கொண்டு பல விதமான யோசனைகளையும் கொண்டு வருவார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement