பழிக்கு பழி வாங்குவதில் இவர்கள்தான் ராணி. இந்த ராசிக்கார பெண்களிடம் கனமாக இருங்கள்..!

Advertisement

Most Revenge Seeking Girls Zodiac Signs in Tamil

ஒருவர் நம்மை திட்டிவிட்டால் எந்த அளவுக்கு கோவம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும்..! நாம் தவறு செய்தாலும் எதோ ஒரு கட்டத்தில் அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும். வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் சாதகமாக விஷயம் அமைந்தால் அப்போது அதனை பயன்படுத்தி பழிவாங்கி விடுவோம்..! இது இயற்கையாகவே அனைவருக்கும் தோன்றும். ஆனால் சில ராசிக்கார பெண்கள் உண்மையாவே பழிவாங்குவதில் இரக்கமே இல்லாமல் பழிவாகுவார்களாம்.

இதற்காக காத்திருந்து பழிவாங்கி விடுவார்களாம். சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே பழிவாங்குவதில் ராணி போல் இருப்பார்கள்..! வாங்க இதில் உங்கள் ராசி இருக்கா என்று தெரிந்துகொள்ளலாம்..!

மகரம் ராசி பெண்கள்:

மகர ராசிக்கார பெண்கள் எப்போது பழிவாங்கும் வாய்ப்புகளை தவறவிட மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களிடம் ஏதேனும் சண்டைகள் போட்டிருந்தால் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படியாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருப்பார்கள். சரியான நேரம் வரும் போது தகுந்தது போல் பழிவாங்குவார்கள். மகர ராசிக்கார பெண்கள் உங்களின் மீது இருக்கும் கோவம் தீரும் வரை பழிவாங்குவார்கள். அப்படி இல்லையென்றால் உங்களை பழிவாகுவதை அவர்கள் விடவே மாட்டார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்த ராசிக்கார பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள்கிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்கள்..! 

விருச்சிக ராசி பெண்கள்:

விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் சிறிய தவறுகள் நடந்தால் தேள் போல் கொட்டிக்கொண்டு மட்டுமே இருப்பார்கள். அதேபோல் இவர்களிடம் மன்னிக்கும் குணமே இருக்காது. நீங்கள் சிறிய வயதில் செய்த செயலை மனதில் வைத்து எத்தனை வருடம் ஆனாலும் நீங்கள் செய்த விஷயத்தை மனதில் வைத்து பழிவாகக்கூடிய ராசிக்காரர் தான் விருச்சிகம். இந்த ராசிக்காரர் முடிவு செய்து விட்டால் அதை விட்டு மாறவே மாட்டார்கள்.

சிம்மம் ராசி:

மற்ற ராசிக்காரர்களை விட மிகவும் குறைவான இறக்க குணம் கொண்டவர்கள் இந்த ராசிகாரர் மட்டுமே. அதேபோல் நீங்கள்  செய்த தவறுக்கு மன்னிப்பு  கொடுத்தாலும்,  மனதில் வைத்து கொண்டு அவர்கள் உங்களுக்கு கொடுத்த எல்லையை நீங்கள்  தாண்டிவிட்டால் அவரகள் கோபத்தை அனைத்தையும் ஒரே முறையாக உங்களிடம் காண்பித்துவிடுவார். சிம்ம ராசிக்கார பெண்களை சீண்டும் முன் கவனமாக இருங்கள் அவர்கள் மனதில் உங்களை கணக்கில் எடுத்துவிட்டால் உங்களை பழிவாங்காமல் விடமாட்டார்.

கடக ராசி பெண்கள்:

பழிவாங்குவதில் தனி கவனம் செலுத்துவார்கள். பழிவாகுவதில் சிறந்த திட்டங்களை தீட்டுபவர்கள். பழிவாங்கும் நேரத்திற்காக காத்துகொண்டு இருப்பார்கள். சரியான நேரம் வந்துவிட்டால் உங்களை பழிவாங்குவதில் இரக்கமே காட்டாமல் உங்களை பழிவாங்குவார். அதாவது ஒரு வேலை செய்துகொண்டு இருக்கும் போது தவறு செய்து விட்டால் அதனை நீங்கள் மறைக்க நினைத்தால் உங்களை கடக ராசி பெண்கள் மேலதிகாரிகளிடம் உங்களை மாட்டிவிட்டு பழிவாங்குவார்கள். இவர்கள் பழிவாங்குவதில் இரக்கமே காட்டமாட்டார்களாம்.

மேஷ ராசி பெண்கள்:

மற்றவர்களை விட சற்று மாறுதலாக இருப்பவர் மேஷ ராசிக்காரர் மட்டுமே. இவருக்கு செய்த பாவத்தை மன்னிக்கவும் மாட்டார் அதேபோல் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்காமல் அவர்களுக்கு ஏற்ற தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதியாக  இருப்பார்கள். பச்சையாக சொல்லப்போனால் எதுவாக இருந்தாலும் நேராக உங்களை பழிவாங்குவேன் என்று சொல்வார். மேஷ ராசிகார பெண்கள்.

இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் பாத்து பழகுங்கள்..! இவர்களால் பிரச்சனையில் சிக்கிகொள்வீர்கள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement