ஒரு ஆப்பிளில் எத்தனை கலோரிகள் உள்ளன? | Apple Calories in One
ஹாய் பிரண்ட்ஸ் பொதுவாக அனைவருக்குமே பழம் வகைகள் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான சத்துக்களும், உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளை குணப்படும் தன்மையையும் கொண்டிருக்கும். அந்த வகையில் நாம் இன்று ஆப்பிள் பழம் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு என்பதை பற்றியும், ஆப்பிள் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதையும், ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா?
மீடியம் சைசில் உள்ள ஒரு ஆப்பிளில் உள்ள கலோரி 95..
சராசரியாக 100 கிராம் ஆப்பிளில் 52 கலோரிகள் நிர்நதுள்ளது. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து காரணமாக, பழத்தில் உள்ள சர்க்கரைகள் அனைத்தும் கொழுப்பில் சேமிக்கப்படாமல் இருப்பதை உங்கள் உடல் உறுதி செய்கிறது. அதனால் தான் ஆப்பிள் ஜூஸ் மட்டும் அருந்தாமல் முழு ஆப்பிளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு அல்லது பேரிக்காய் போன்றவற்றை விட ஒரு ஆப்பிளில் 100 கிராமுக்கு அதிக கிலோகலோரி உள்ளது. இருப்பினும், வாழைப்பழம் அல்லது மாம்பழத்தை விட இதில் குறைவான கலோரிகள் உள்ளன.
ஆப்பிள் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்களான வைட்டமின் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.
இந்த ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.
ஆப்பிள் பழம் நன்மைகள்
ஆப்பிள் பழம் நன்மைகள்:
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் பொருள்களில் ஒன்று.
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
ஆப்பிள் பழத்தில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.
இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |