உடல் ஆரோக்கியம் குறிப்புகள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தினம் தோறும் பயனுள்ள தகவலை பற்றி நிறைய தெரிந்துகொண்டு தான் வருகிறோம். அதேபோல் இதை அனைத்தையும் தெரிந்துகொள்ள போன் தேவை அந்த போன்னுக்கு நெட்பேக் தேவை அப்படி இருக்கும் பட்சத்தில் தினம் தோறும் அன்றாடம் நெட்பேக் போட்டுகொண்டு வருகிறோம் அப்போது தான் அதனை பயன்படுத்த முடியும்.
உயிர் இல்லாத போன் னுக்கு இவ்வளவு இருக்கும் போது உயிர் உள்ள நமக்கு எவ்வளவு சக்திகள் தேவைப்படும். போன் னுக்கு 5ஜி போல் நம் உடலுக்கும் 5ஜி வந்துவிட்டது வாங்க தெரிந்துகொள்வோம் அதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வோம்..!
பூண்டு மருத்துவ பயன்கள்:
நாம் அன்றாடம் சமைக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒரு நன்மைகள் உள்ளது. அது அனைத்தையும் நாம் தான் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். நாம் சமைக்கும் பொருட்களில் மிகவும் முக்கிய தன்மை வகிப்பது பூண்டு ஆகும். இந்த பூண்டில் வைட்டமின் சி, பி6, செலினியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை உட்கொள்வதால் கொல்ஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றிலிருந்து தவிர்க்கிறது. அதுமட்டுமில்லாமல் இதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதனால் இதனை குழம்பில் மட்டுமில்லாமல் சட்னி போன்றவற்றில் சேர்த்துக்கொள்ளலாம்.
பச்சை மிளகாய் பயன்கள்:
மிளகாய் என்றால் உடனே அது வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் அதில் சத்துக்கள் எவ்வளவு என்பது அவர்களுக்கு தெரியவில்லை வாங்க அதனை தெரிந்துகொள்வோம். இந்த பச்சை மிளகாயில் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.வைட்டமின் ஈ சத்து சருமத்தில் உள்ள எண்ணெய் வலிவதை தடுக்கிறது. மூளைக்கு தேவையான என்டோர்பின்ஸ் உண்டாகி மனநிலையை மேம்படுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆன்டி-பாக்டீரியா தன்மைகள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைக்கிறது.மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜிகளை தடுத்து சுவாசிப்பதை பலப்படுத்துகிறது.
இஞ்சி பயன்கள்:
இஞ்சியை அதிகளவு அசைவ உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை அதிகளவு உணவுகளில் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை மேம்படுத்துகிறது.அதேபோல் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வுக்கான வழி செய்கிறது.
உடலில் செரிமான பிரச்சனையிலிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. ஏதேனும் செரிமான பிரச்சனை இருந்தாலும் உடனே சிறிது இஞ்சி தண்ணீரை குடித்தால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் பயன்கள்:
இதனை தினமும் உட்கொள்வதால் இரண்டு ஆப்பிள் சாப்பிட்டால் எவ்வளவு சத்துக்களோ அந்த அளவிற்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் சத்துக்கள் கிடைக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதில் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம். அது சர்க்கரை நோயை அளவை குறைகிறது. உங்களுக்கு நெல்லிக்காய் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் பொடி, ஜூஸ், துவையல், ஊறுகாய் போட்டு சாப்பிடுங்கள் ஆனால் சாப்பிட மறுக்காதீர்கள்.
கிரீன் டீ பயன்கள்:
அதிகளவு உடல் எடையை குறைக்க மட்டுமே இதனை உட்கொள்வார்கள் ஆனால் இது அதற்கு மட்டுமே பயன்படாது நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. டீ. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை தவிர்க்கவும் உதவுகிறது. இரண்டாவது நீரிழிவு நோயின் பாதிப்பை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |