கடுகு தீமைகள்
இன்றைய ஆரோக்கியம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் காண இருக்கின்றோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்க்கும் பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. அதாவது வெந்தயம், சீரகம், மிளகு போன்ற பொருட்கள் இல்லாமல் சமையலே கிடையாது. அப்படி நாம் சமைக்கும் பொருட்களில் அதிகமாக பயன்படுத்துவது கடுகு தான். என்னதான் நாம் கடுகை அதிகமாக பயன்படுத்தினாலும் அதை ஒரு அளவாக தான் பயன்படுத்துவோம்.
நம் அனைவருக்குமே தெரியும் கடுகை தாளிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சிலர் கடுகை அதிகமாக பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. கடுகு அளவுக்கு அதிகமாக சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? சரி வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து அதை தெரிந்து கொள்வோம்.
நீங்கள் பயன்படுத்துவது கடுகு தானா என்று எப்படி தெரிந்துகொள்வது.? |
கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
கடுகு பற்றி நம் அனைவருக்குமே தெரியும். கடுகு மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் அதை நாம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது நம் உடலுக்கு நல்லதல்ல. கடுகை அதிகாமாக பயன்படுத்தும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அதனால் தான் நாம் கடுகை தாளிக்க மட்டும் பயன்படுத்துகிறோம்.
கடுகை நாம் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் போது அது தொண்டையை சேதப்படுத்தும் மற்றும் இதயம் செயலிழப்பு, வயிற்றுப்போக்கு, அயர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன..? |
நீரிழிவு நோய்:
கடுகு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோய் இருந்தால் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால், கடுகு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் மேலும் உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவதற்கு வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் கடுகை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கடுகில் மாதவிடாய் காலத்தில் தொடங்கி கருச்சிதைவை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் இருக்கின்றன. அதனால் கடுகை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |