கடுக்காய் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கடுக்காய் தீமைகள் | Kadukkai Side Effects in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் ஆரோக்கியம் பதிவில் கடுக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். கடுக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்திருப்போம். இன்று அதனுடைய தீமைகள் பற்றி பார்க்கப் போகிறோம்.

நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு உணவு பொருளும் எவ்வளவு நன்மைகள் கொண்டிருக்கிறதோ அதே அளவிற்கு அதை அதிகமாக உட்கொள்வதால் நமது உடலுக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க…

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ இயற்கை தந்த கடுக்காய் மருத்துவ குணங்கள்

கடுக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

கடுக்காய் மருத்துவ குணமிக்க ஒரு மூலிகை பொருள் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. இருந்தாலும் இதனால் பக்கவிளைவுகளும் உண்டு. இந்த கடுக்காய் அதிகமாக உட்கொள்வதால் நமது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

கடுக்காய் என்பது இளமையையும் அழகையும் தந்து முதுமையைத் தடுக்கக்கூடிய ஒரு காயகல்ப பொருள். அவற்றின் தரம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். சில இடங்களில் அதன் கொட்டையோடு சேர்த்து அரைத்து விற்பார்கள். அப்போது அதன் மருத்துவ குணம் மாறும். தோலை மட்டும் தட்டியெடுத்துவிட்டு, கொட்டை நீக்கி அரைத்த கடுக்காய்ப் பொடியை தினமும் ஒரு கிராம் அளவுக்கு எடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும். அளவும் முக்கியம். 500 மி.கி முதல் ஒரு கிராம் அளவு வரை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். கடுக்காய்க்கு எடையைக் குறைக்கும் தன்மையும் உண்டு.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ கடுக்காய் பொடியின் நன்மைகள் 

  1. இந்த கடுக்காய் அதிகமாக உட்கொள்வதால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படுத்துகிறது. இதனால், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலசிக்கல், குடலில் புண் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  2. நீரிழிவு நோயாளிகள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
  3. இந்த கடுக்காயை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது இன்னும் அறிவுறுத்த படவில்லை. சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
  4. சாதாரணமாக கடுக்காய் சாப்பிடும் போது எதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் கடுக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
  5. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடும்போது அவர்களுக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் குமட்டல், நீரிழப்பு மற்றும் உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படுத்துகிறது.
  6. உடலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  7. மேற்கூறிய உபாதைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement