கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி? | Kadukkai Benefits in Tamil

Advertisement

கடுக்காய் பொடி செய்வது எப்படி? | How To Make Kadukkai Powder

நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் ஏதாவது ஒரு நன்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் கடுக்காய் பொடியில் ஏராளமான நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல், இருமல், சளி, நீரிழிவு நோய்க்கு, உடல் எடை குறைவதற்கு, இரத்த சோகைக்கு, உடல் எடை அதிகரிப்பதற்கு மற்றும் தொண்டை புண் சரியாவதற்கு என பல வகைகளிலும் பயன்படுகிறது. ஏராளமான பயன் உள்ள இந்த கடுக்காய் பொடியை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க.

கடுக்காய் பொடி செய்வது எப்படி? – செய்முறை:

kadukkai benefits in tamil

  • முதலில் கடுக்காயை சூரிய ஒளியில் படுமாறு வைத்து நன்கு காய வைத்து கொள்ள வேண்டும்.
  • காய வைத்த கடுக்காயை தங்களிடம் இருக்கும் உரல் அல்லது ஏதேனும் ஒரு கல்லை வைத்து கடுக்காயில் உள்ள விதையை நீக்கி கொள்ளவும்.
  • விதை நீக்கிய கடுக்காயின் மேல் பகுதியை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு மிக்ஸியில் அல்லது 1 கிலோ அதுபோல அரைப்பவர்கள் Rice மில்லில் அரைத்துக்கொள்ளவும்.
  • மிக்ஸியை தண்ணீர் இல்லாமல் நன்கு துடைத்துவிட்டு கடுக்காயின் மேல் பகுதியை அரைத்து கொள்ளவும். அவ்வளவுதான் கடுக்காய் பொடி தயார் ஆகிவிடும்.
  • இதனை காற்று போகாத ஒரு Bottle அல்லது பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தலாம்.

கடுக்காய் சாப்பிடும் முறை – Kadukkai Benefits in Tamil:

  • கடுக்காய் பொடியினை வெந்நீர் அல்லது சாதாரண நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது மாத்திரை சாப்பிடுவது போல தண்ணீரை முதலில் எடுத்து கொண்டு பின் அந்த பொடியை வாயில் போட்டும் சாப்பிடலாம்.
  • இரவில் உணவை சாப்பிட்டு விட்டு அதன் பிறகு இந்த கடுக்காயை சாப்பிடலாம்.

கடுக்காய் பொடியின் நன்மைகள் – Kadukkai Benefits in Tamil

kadukkai podi thayarippathu eppadi

  • கண் பார்வை கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
  • மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் போன்றவற்றை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
  • தண்ணீர் சத்து இல்லாமல் நாக்கு வறண்டு போவது, உடல் சூட்டை தணிப்பதற்கு உதவுகிறது.
  • சிறுநீர் பிரச்சனைகள் மற்றும் ரத்தம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுத்தபட்டு வருகிறது.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
  • வாதம் மற்றும் பித்த கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
  • உடம்பில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்குவதற்கு பயன்படுகிறது.
  • வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலியை சரி செய்யவும் உதவுகிறது.
  • பெண் மற்றும் பொடுகுத்தொல்லையை சரி செய்யவும் பயன்படுகிறது.
  • பல் வலி மற்றும் வாய் நாற்றம் போன்றவைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தண்ணீருடன் 1 டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சிரகம் சேர்த்து சூடாக்கி வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
கொள்ளு நன்மைகள்

கடுக்காய் பொடி தீமைகள்:

  • நாட்டு மருந்து கடைகளில் கடுக்காய் பொடியை வாங்குவதை விட வீட்டில் செய்து உபயோகப்படுத்துவது சிறந்தது. ஏனென்றால் கடைகளில் செய்பவர்கள் விதையை நீக்கி விட்டு செய்வார்களா என்பது ஒரு கேள்வி குறியாகும்.
  • இந்த பொடியை வீட்டில் செய்பவர்கள் அதன் விதையை நீக்கி விட்டு செய்யவும். அந்த விதையில் அதிக அளவு நச்சு தன்மை உள்ளது.
ஏலக்காய் நன்மைகள்

 

இது போன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement