கடைவாய் பல் வளர்ச்சி வலி | கடைவாய் பல் ஈறு வீக்கம் குணமாக
நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் கடைவாய் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக பல் வலி வருபவர்கள் அனைவரும் சொல்வது தான் தனக்கு வந்தால் தான் தெரியும் நான் படும் கஷ்டம் என்னவென்று சொல்வார்கள். பல் வலி மட்டும் உயிரை கொள்ளும் அளவிற்கு வலியை தரும். அதிலும் மிகவும் முக்கியமானது கடைவாய்ப்பல் அந்தளவிற்கு அதன் வலி கடுமையாக இருக்கும். இது எப்போது வேண்டுமானாலும் அதிகமாக வலியை தரும். இது வருவதற்கான காரணம் என்ன.
| பல் வலி & பல் சொத்தை பாட்டி வைத்தியம்..! |
கடைவாய் பல் எந்த வயதில் விழும்:
- கடைவாய்ப்பல் சிறு வயதில் வளராது. கடைவாய் பல் வளருவதற்கு குறிப்பிட்ட வயது உள்ளது. அது 17 முதல் 25 வயதுக்குள் வளரும் 25 வயதிற்கு மேலும் வாய்ப்பு உள்ளது. இது பற்களில் கடைசியாக வளரக்கூடியது. கடைசியாக வளர்வதால் கடைவாய்ப்பல் வளருவதற்கு இடம் இருக்காது.
- அதனால் பற்களுக்கு இடையில் அல்லது ஈறுகளில் வளரும். அதனால் வலி, வீக்கம் ஏற்படும். அது ஈறுகளில் ஏற்படுவதால் அதிகம் வலியை தரும்.
- இந்த கடைவாய் பல் சிலருக்கு வளராமலும் இருக்கும். அந்த பற்கள் வளராமல் மோலார் பல் சாய்வாக சுற்றியுள்ள பற்களுக்கு வலிகளையும், அழுத்தத்தையும் தரும்.
கடைவாய் பல் வலி நீங்க:

- இந்த கிராம்பு கடைவாய் பல்லுக்கு மட்டுமில்லாமல் பொதுவாக பல் வலிக்கு பெரிதும் உதவும். இதில் உள்ள மருத்துவ பயன்கள் பற்களை மரத்துப்போக செய்யும் அதனால் பற்கள் வலி ஈறுகளில் வலி இருப்பதை மறந்து அதன் வலியும் நமக்கு தெரியாது.
- இதில் உள்ள ஆன்டி-செப்டிக் பற்களில் உள்ள தொற்றுக்களை நீக்கி பற்களை வலிமை பெறச்செய்யும்.
உப்பு பயன்கள் | salt benefits in tamil

- உப்பு என்பது அனைவரின் இன்றிமையாத பொருள். அதிலும் இது மருத்துவத்திற்கு மிகவும் உதவுகிறது. இந்த உப்பு கடைவாய்ப்பல் வலி ஏற்பட்டால் முதலில் வீட்டில் உள்ள பாட்டி சொல்வது வலி உள்ள இடத்தில உப்பை வை வலி இருக்காது என்பார்கள்.
- பற்கள் இடையில் கடைவாய்ப்பல் வலி ஏற்பட்டால் அது வருவதாலும் வலி ஏற்படும் இல்லையென்றால் பற்களில் உள்ள கிருமிகளாலும் வலி ஏற்படும். இந்த உப்பை பயன்படுத்துவதால் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி பல் வலியை போக்கும்.
- இதற்கு நீங்கள் ஒரு தேக்கரண்டி உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் போட வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த தண்ணீரை சேர்த்து வாய் கொப்பளிப்பதால் வலி மற்றும் கிருமிகளையும் நீக்க கூடியது.
பூண்டு:

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாட்டிக், அழற்சி எதிர்ப்பு போன்ற குணங்கள் நிறைந்துள்ளது. கடவாய் பல் வளையையே சரி செய்வதற்கு இவை பெரிதும் உதவியாக இருகிறது. வாயில் உள்ள பாக்டீரியா பிரச்சனையை சரி செய்து வழியை குறைக்க செய்கிறது.
இதற்கு ஒரு பூண்டு பற்களை எடுத்து நசித்து கொள்ள வேண்டும். இதனை வலி உள்ள பற்களின் மீது வைக்க வேண்டும். இல்லை என்னால் பற்களின் மேல் வைக்க முடியவில்லை என்றால் 1 அல்லது 2 பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம்.
வெங்காயம்:
வெங்காயம் ஆனது கிருமி நாசினியாக செயல்படுகிறது. அதநலிவை பற்களில் உள்ள தொற்றை சரி செய்து வலியை குறைக்க செய்கிறது.
வலியை சரி செய்வதற்கு வெங்காயத்தை சின்னதாக கட் செய்து அதனை சில நிமிடங்கள் வாயில் போட்டு மெல்ல வேண்டும். உங்களால் மெல்ல முடியவில்லை என்றால் வெங்காயத்தை வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
பெருங்காயம்:

கடவாய் பல் வலியை சரி செய்வதற்கு பெருங்காயம் சிறந்த தீர்வினை தருகிறது. பெருங்காயம் ஆனது அலர்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் ஆனது வலியை குறைப்பதற்கு உதவுகிறது. வலியை சரி செய்வதற்கு பெருங்காயத்தை 1/4 டீஸ்பூன் எடுத்து 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூசுடன் கலந்து அதனை லேசாக சுட வைக்கவும். காட்டனை எடுத்து இந்த தண்ணீரில் நனைத்து கொள்ளவேண்டும். இதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் பல் வலியானது நீங்கும்.
மேல் கூறியுள்ள குறிப்புகளில் எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதுமானது வலியை குறைக்க செய்யும்.
பல் வலியின் போது செய்ய கூடாதவை:
- பல் வலி இருக்கும் இடத்தில் ஐஸ்பேக் வைத்தாலே பல் வலியை குறைக்கச் செய்யும்.
- வாயின் ஆரோக்கிய நன்மைகளுக்கு நல்லெண்ணெயை வைத்து வாய் கொப்பளித்தாலே சரியாகிவிடும்.
- பல் வலியின் போது கடினமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- சர்க்கரை கலந்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- பற்களில் அழுக்குகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |













