வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருப்பை கட்டி அறிகுறிகள் | Neer Katti Symptoms in Tamil

Updated On: May 27, 2023 9:08 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

கருப்பை நீர்க்கட்டி அறிகுறிகள் | Karuppai Katti Symptoms in Tamil

பெண்களுக்கு தாய்மை உணர்வை கொடுப்பது கர்ப்பப்பை. ஆனால் இப்பொழுது இருக்கும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையினால் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பபையில் கட்டிகள் உருவாகுகின்றன. மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நிகழாமல் இருப்பதால், சினை முட்டைகள் வெளிவர முடியவில்லை ஆதலால் கருப்பை கட்டிகள் தோன்றுகின்றன. நாம் இந்த தொகுப்பில் கருப்பை கட்டிகள் தோன்றுவதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கருப்பை கட்டி அறிகுறிகள்:

இந்த கட்டிகளில் முக்கியமாக ஐந்து வகை கட்டிகள் உள்ளன அவை

  1. நார்த்திசு கட்டிகள்
  2. அடினோமைசிஸ் கட்டிகள்
  3. பாலிப்ஸ் கட்டிகள்
  4. கர்ப்பப்பை புற்றுநோய் கட்டிகள்
  5. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கட்டிகள்

அதிக உதிரப்போக்கு – Neer Katti Symptoms in Tamil:

கருப்பை கட்டி அறிகுறிகள்

  • கருப்பை கட்டி அறிகுறிகள் in tamil: நார்த்திசு கட்டிகள் பெரும்பாலான பெண்களுக்கு வருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வழக்கத்தை விட அதிக உதிரப்போக்கு அல்லது அதிக நாட்கள் உதிரப்போக்கு ஏற்படுவது போன்றவை ஏற்படலாம்.
  • திருமணம் ஆன பெண்களுக்கு உடலுறவு கொள்ளும் போது இரத்த கசிவு ஏற்படலாம். மாதவிடாய் முடிந்த 40 – 50 வயது பெண்மணிகளுக்கு மீண்டும் உதிரப்போக்கு ஏற்பட்டால் அது கருப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளே ஆகும்.
கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்

வலி – கருப்பை கட்டி அறிகுறிகள்:

கருப்பை கட்டி அறிகுறிகள்

  • கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்: இந்த கட்டிகள் இருந்தால் வயிற்றின் அடிப்பகுதியில், முதுகில், இடுப்பில் வலி ஏற்படும். சில பெண்களுக்கு உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்படும்.

கர்ப்பத்தடை – Neer Katti Symptoms in Tamil:

Neer Katti Symptoms in Tamil

  • Neerkatti Symptoms in Tamil: கருப்பையில் கட்டிகள் இருப்பதால் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படலாம் அல்லது சிலருக்கு கர்ப்பம் தரிக்க முடியாமல் கூட போகலாம்.
  • கர்ப்பம் தரித்த பெண்களுக்கு கரு கலைப்பு நிகழலாம், குறை மாத பிரசவம், குழந்தை சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்.

இரத்த சோகை, சிறுநீர் பிரச்சனை:

Neer Katti Symptoms in Tamil

  • கருப்பை கட்டி அறிகுறிகள்: மாதவிடாய் நேரத்தில் அதிக உதிரபோக்கு ஏற்படுவதால் இரத்த சோகை ஏற்படும். சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் அதாவது சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் வெளிப்படும் போது இரத்தம் வெளிவருவது போன்றவை கருப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம்

உடல் எடை குறைதல் – கருப்பை கட்டி அறிகுறிகள்:

Neer Katti Symptoms in Tamil

  • மலச்சிக்கல், வழக்கத்தை விட அதிக உடல் எடை இழப்பு, பசியின்மை போன்றவை ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now