குங்குமப் பூ நன்மைகள் (Saffron Benefits) |
இது பொதுவாக ஜபரான், கூங், கேசர் மற்றும் குங்குமப் பூ என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. குங்குமப் பூ (saffron benefits in pregnancy) உணவின் சுவைக்காக அதிகமாக பயன்படுத்துவார்கள். இவற்றில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. அதுவும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அதிக நன்மையை பெறுகின்றனர். இதன் மருத்துவ குணத்தால் செரிமான தன்மை மற்றும் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது குங்குமப் பூ (saffron benefits in pregnancy). இருந்தாலும் அதை போதுமான அளவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரி இவற்றின் நன்மை மற்றும் தீமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
Kungumapoo Benefits During Pregnancy in Tamil
குங்குமப் பூ (Saffron Benefits in pregnancy):
இந்த குங்குமப் பூ (saffron benefits) உலகளவில் உயர்ந்த மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது. இந்தியாவை பொருத்த வரை காஷ்மீர் மலை பிரதேசத்தில் இதை உற்பத்தி செய்கின்றனர்.
இவை மசாலாவின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பு ஈடுயிணையற்றதாக விளங்குகிறது.
குங்குமப் பூ பயன்கள் (Saffron Benefits in pregnancy):
- குங்குமப் பூ பொதுவாக சமையல் துறை, அழகுத்துறை மற்றும் இதன் பயன் எல்லா துறையிலும் பயனுள்ளதாக விளங்குகிறது.
- பெண்களுக்கு மாதவிடா பிரச்சனையில் வயிற்று வலியை குணமாக்கும் தன்மை வாய்ந்தது குங்குமப் பூ.
- ஆண்மை குறைவு பிரச்சனைக்கு பயன்படுகிறது.
- ஆஸ்துமா, விறைப்பு குறைப்பாடு, புற்று நோய், வழுக்கை போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மையுடையது.
- ஆனால் இதன் பயன்கள் பொருத்த வரை எந்த ஒரு ஆராய்ச்சி கூறுகள் எதுவும் இல்லை.
- ஆனால் இதை காலம் காலமாக மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
குங்குமப் பூ அதிகம் எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமா?
கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு குங்குமப் பூவை அதிகமாகவே எடுத்துக் கொள்வார்கள. ஆனால் குங்குமப் பூவை ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு மேல் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஏன் என்றால் இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் சேர்த்து மரணம் அடைய அதிக வாய்ப்புள்ளது. குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!
மரபணு:
ஒரு குழந்தையின் நிறம் என்பது அந்த குழந்தையின் மரபணு சார்ந்தது அல்லது பரம்பரை சார்ந்ததாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்கள் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று அதிகமாக குங்குமப் பூ எடுத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறு.
பியூட்டி ஏஜெண்ட்:
சருமத்தில் அதிகமாக அழகை சேர்ப்பதர்க்காக பொதுவாக அழகு துறையில் அதிகமாக குங்குமப் பூவை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒன்றும் குழந்தைகளின் நிறம் மாற போவதில்லை.
குங்குமப் பூ பால்:
சிறிதளவு பாலில் குங்குமப் பூ (saffron benefits in pregnancy) கலந்து கர்ப்ப காலத்தில் பெண்கள் குடிக்கலாம். குங்குமப் பூவில் அதிகம் ஆரோக்கிய நன்மைகள் புதைந்து கிடைக்கிறது.
பொதுவாக பாலில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது இதனுடன் இரண்டே இரண்டு குங்கும்ப் பூ மட்டும் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் உடலில் அதிக சக்திகள் கிடைக்கிறது, தசைகள் சீராகிறது மற்றும் உடலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
மற்ற உணவுகள்:
குங்குமப் பூவை (saffron benefits in pregnancy) பாலுடன் மட்டும் இல்லாமல் கீர், பிரியாணி, லெசி போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
அபாயம்:
கர்ப்ப காலத்தில் குங்குமப் பூவை அதிகம் எடுத்துக் கொண்டால் கருப்பையில் கருச்சிதைவை ஏற்படுத்தும். அதனால் ஒரு நாளைக்கு குங்குமப் பூவை 10 கிராமுக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.
மனநிலை:
கர்ப்ப காலத்தில் 10 கிராம் அளவு குங்குமப் பூ (saffron benefits in pregnancy) சாப்பிட்டால் மன அமைதியைக் கொடுக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது குங்குமப் பூ.
இரத்த அழுத்தம்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலில் 2 அல்லது 3 அளவு குங்குமப் பூவை எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
ஜீரண சக்தி:
கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு மலச்சிக்கள், ஜீரண பிரச்சனை மற்றும் வயிறு மந்தம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். அதனால் தினமும் பாலில் இரண்டு அல்லது முன்று குங்குமப் பூவை கலந்து குடித்து வந்தால் விரைவில் ஜீரணமாகும் தன்மை குங்குமப் பூவுக்கு உள்ளது.
கர்ப்ப காலத்தில் காலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு:
கர்ப்பகாலத்தில் காலை எழுந்தவுடன் சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், சோர்வு போன்ற பிரச்சனைகள் உள்ளது. அதனால் தினமும் காலை எழுந்தவுடன் குங்குமப் பூ டீ போட்டுக் குடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
அனிமியா:
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரும்பு சத்தை அதிகரித்து ஹூமோகுளோபின் அளவை பாதுகாக்கிறது குங்குமப் பூ (Saffron Benefits in pregnancy).
இதய நோய்கள்:
கர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டல் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது இரத்த குழாயில் தேவையற்ற கொழுப்புகளை படிய வைத்து இதய நோயை ஏற்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் அதிகம் இருக்கக்கூடிய குங்குமப் பூவை (saffron benefits in pregnancy) தேவையான அளவு சாப்பிட வேண்டும்.
குழந்தை அசைவு:
கர்ப்ப காலத்தில் ஒரு டம்ளர் குங்குமப் பூவை சாப்பிட்டால் உங்கள் உடல் சற்று வெப்ப நிலை உயர்ந்து, உங்கள் குழந்தை அசைவதை நீங்கள் உணர்வீர்கள். இருந்தாலும் அதிகமாக குங்குமப் பூ சேர்த்துக் கொள்ளக்கூடாது.
ஊட்டச்சத்துகள்:
குங்குமப் பூவில் அதிகம் விட்டமின் ஏ, விட்டமின் சி, தயமின், ரிபோப்ளவின், நியசின் மற்றும் போலிக் அமிலம் ஆகியவை அதிகமாகவே இருக்கிறது.
சுகப்பிரசவம் ஆகணுமா ? Normal Delivery Tips in Tamil..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |