வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!

Updated On: September 19, 2023 1:26 PM
Follow Us:
கற்றாழை ஜூஸ்
---Advertisement---
Advertisement

கற்றாழை ஜூஸ் குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!

நாம் இந்த உலகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் தினமும் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான ஜூஸ் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது கற்றாழை ஜூஸை. இந்த கற்றாழை ஜூஸ்ல் (benefits of aloe vera juice in tamil)  கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் நம் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியத்தை தருகிறது. நம் உடலில் உள்ள நச்சுகிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கவும், நம் உடலை பாதுகாத்துக் கொள்ளவும் பல வகையான ஜூஸ் இருக்கிறது. அவற்றில் ஒன்றாக இருக்கிறது கற்றாழை ஜூஸ் (benefits of aloe vera juice in tamil).

நாவல்பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?

சரி கற்றாழை ஜூஸை குடிப்பதால் என்ன நன்மை நிகழும் என்று இங்கு காண்போம்.

கற்றாழை பூண்டு ஜூஸ்:

தேவையான பொருட்கள்:

கற்றாழை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

  • மிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு சிறிதளவு மற்றும் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அடித்தால் கற்றாழை பூண்டு ஜூஸ் ரெடி.
  • இந்த ஜூஸை வாரத்தில் 5 முறை குடிக்கலாம்.
  • இதை குடித்து வர நம் உடலை தாக்கும் பல வகையான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய:

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அழிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபெறலாம்.

சைனஸ் பிரச்சனை குனமாக:

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும் மற்றும் சைனஸ் நோய் பிரச்சனைகளும் குணமாகும்.

மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கண்களில் அடிபட்டால்:

கண் அடிபட்டாலோ அல்லது இதர காரணங்களாலோ கண்கள் சிவந்து அல்லது வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை ஒரு துணியில் நன்றாக கட்டி அந்த துணியை தூங்கும் போது பாதிக்கப்பட்ட கண்களில் கட்டி தூங்கினால் மூன்று நாட்களில் கண் பிரச்சனைகள் குணமாகும்.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்து வர உடலின் மெட்டபாலிச்சத்தை அதிகரித்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சத்தை அழித்து உடல் எடை குறைய உதவுகிறது.கற்றாழை ஜுஸில்

புற்று நோய் வராமல் தடுக்கும்:

கற்றாழை பூண்டு ஜுஸில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் வளமாக உள்ளது.

அதனால் புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இது கற்றாழை ஜூஸ் (benefits of aloe vera juice in tamil) புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

காய்ச்சல் குணமாக:

இந்த கற்றாழை ஜூஸ் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் காய்ச்சல் ஏற்படும் போது ஒரு டம்ளர் அளவு கற்றாழை ஜூஸ் (benefits of aloe vera juice in tamil) குடித்தால் காய்ச்சல் உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து உடலை பாதுகாக்கும்.

இரத்தம் அழுத்தம் குறைய:

இந்த கற்றாழை பூண்டு ஜூஸை இரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

ஞாபக மறதி பிரச்சனையை தடுக்க:

தினமும் கற்றாழை ஜூஸை (benefits of aloe vera juice in tamil) ஒரு டம்ளர் குடித்த வந்தால் ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை எதிர்க்கும் தன்மையுடையது.

ஆகையால் தினமும் கற்றாழை ஜூஸை குடித்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வோம்.

எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்???

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now