குடலிறக்கம் பற்றிய சில அறிகுறிகள்

Advertisement

குடலிறக்கம் என்றால் என்ன

வணக்கம்  நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் குடலிறக்கம் அறிகுறிகள் மற்றும் அவை ஏற்பட காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். குடலிறக்கம் பிரச்சனைகள் பொதுவாக பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது. இவை பெரும்பாலும் அடிவற்றில் உருவாகும் பிரச்சனையாகும். குடலிறக்கத்தின் பொழுது  வயிற்றில் கடுமையான வழியும், வீக்கமும் ஏற்படுகிறது, இவை எதனால் ஏற்படுகிறது என்று நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

துவர்ப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா.!

குடலிறக்கம் ஏற்பட காரணம்:

இந்த குடலிறக்கம் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பின் புற தொடையில் அதிகமாக  எடை அதாவது கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. இது போன்ற குடலிறக்கம் ஏற்படுவதால் இடுப்பு மற்றும் மூட்டுக்குரிய நரம்பு வலியின் காரணமாகவும் இருக்கிறது.  இவை தன்னிச்சையான பக்கவாட்டு கீழ்ப்புறக் குடலிறக்கம் என்றும் சொல்லப்டுக்கிறது. குடலிறக்கமானது ஆண்களுக்கு பாதிப்புகள் அதிகமாவே இருக்கும்.

குடலிறக்கம் வகைகள்:

  • ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா
  • ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா
  • ஹாயிட்டல் ஹெர்னியா
  • இன்ஸிஜனல் ஹெர்னியா

ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா:

இந்த வகை குடலிறக்கமானது ஆறு மாத குழந்தைகளுக்கு தொப்புளில் ஏற்படும் ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா குடலிறக்கமாகும்.

ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா:

ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்பது அடிவயிற்றில் கீழ் வரும் ஒருவகையான குடலிறக்கம் ஆகும்.

ஹாயிட்டல் ஹெர்னியா:

இந்த வகை குடலிறக்கமானது வயிற்றுப் பகுதியில் உள்ள டாயஃப்ரம் வழியாக மார்பு வரையுள்ள தசைகளையும் மற்றும் வயிற்று தசைகளையும் பாதிக்கக்கூடிய குடலிறக்கமாகும்.

இன்ஸிஜனல் ஹெர்னியா:

இன்ஸிஜனல் ஹெர்னியா என்பது வயிற்றில் ஏதேனும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நபருக்கு வந்தால் குடலிறக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

குடலிறக்கம் ஏற்பட காரணம்:

  • இடுப்பு தசைகளில் காயம் ஏற்படுவது.
  • சில அறுவைச் சிகிச்சைகளின் விளைவாகவும் ஏற்படுகின்றது.
  • அதிக உடல் பருமன் காரணமாகவும் ஏற்படுகிறது
  • மலச்சிக்கல் காரணமாக  ஏற்படுகின்றது.
  • பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் தசைகள் விரிவடைவதினாலும் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
  • தொடர்ந்து  இருமல் வருவதன்  காரணமாகவும் ஏற்படுகின்றது.
  •  வயதாகிய பிறகு சிலருக்கு தசைகளின் பலவீனத்தால் ஏற்படுகிறது.
  •  அதிகமாக எடை தூக்குவதால் ஏற்படுகிறது.

குடலிறக்கம் அறிகுறிகள்:

  • மலத்தை வெளியேற்றும் பொழுது  பல சிக்கல்.
  • சிலருக்கு அடிவயிற்று பகுதில் வீக்கம்.
  • வயிற்றில் உள்ள கொழுப்புகளை விலக்குதல்
  • அதிக நேரம் நிக்கும் பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும்  வலி உண்டாகுதல்.

குடலிறக்கம் வராமல் தடுக்க:

  • குடலிறக்கம் வராமல் இருப்பதற்கு உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம்.
  • கனமான பொருட்களை தூக்கும் பொழுது அதிக கவனம் தேவை, ஒருவரின் உதவியோடு கனமான பொருட்களை தூக்குவது நல்லது.
  • சிலர்க்கு தொடர்ந்து இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
  • மலம் கழிக்கும் பொழுது அதிகமாக அழுத்தம் தருவதை தவிர்ப்பது நல்லது.
  • உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement