தேங்காய் பூ நன்மைகள்
நாம் வாழும் இன்றைய காலம் எவ்வளவோ மாறி விட்டது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவர்கள் சாப்பிட உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளும் தான் இதற்கு காரணம். ஆனால் இன்றைய காலம் அப்படி இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு என்ன நோய் வருகிறது என்று சொல்ல முடியவில்லை.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவை உண்டு நோய்களை குணப்படுத்தினார்கள். ஆனால் நாம் மருந்தை உண்டு நோய்களை வரவழைக்கின்றோம். அதை தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். சரி நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இன்று தேங்காய் பூவில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
Thengai Poo Benefits in Tamil
செரிமான கோளாறுகள் நீங்க:
தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை 2 மடங்காக அதிகரிக்கும் பண்புகள் இருக்கின்றன. இது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
மேலும் தேங்காய்ப் பூவில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் விரைவில் முதுமை அடைவதைத் தடுத்து இளமையாக வைத்து கொள்கிறது. அதுமட்டுமில்லாமல் தோலில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத் தொய்வு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
தேங்காய் பூவில் இருக்கும் சத்துக்கள் புற்றுநோய் செல்களைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் -யை (Free Radicals) நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
தைராய்டு பிரச்சனையை சரி செய்ய:
தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனையை சரி செய்யலாம். இதில் இருக்கும் சத்துக்கள் தைராய்டு சுரப்பை குணப்படுத்துகிறது.
மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிடலாம். மேலும் இது மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்துகிறது. .
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
தேங்காய் பூவில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகளை நீக்குகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பிற இதயக் கோளாறுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தேங்காய் பூவில் இருக்கும் சத்துக்கள் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது.
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த:
தேங்காய் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்தாக இருக்கிறது. காரணம் தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
தேங்காய் பால் நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |