வெள்ளை சக்கரை நல்லதா அல்லது நாட்டு சக்கரை நல்லதா..?

Advertisement

வெள்ளை சக்கரை அல்லது நாட்டு சக்கரை

கால மாற்றத்தின் காரணமாக நாம் அனைவரும் நாகரீக வாழ்க்கைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம். அவற்றிளும் வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்றும், கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது என்றும் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதுவும் வெள்ளையாக பாலீஸ் செய்யப்பட்ட மற்றும் பளபளப்பாக இருக்கும் உணவு பொருட்களை அதிகமாகவே உட்கொள்கிறோம்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நாம் சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தி வருவது வெள்ளை சர்கரையைத் தான், ஆனால் இதனை அதிகம் உணவு பொருட்களில் சேர்ப்பதன் மூலம் நம் உடலுக்கு பல வகையான நோய்கள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக நாம் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை என அதிகமாக உட்கொள்ளும் நிலமைக்கு தள்ளப்பட்டு விடுவோம். எனவே நமக்கு அதிகம் ன்மை அளிக்க கூடிய நாட்டு சக்கரையைப் பற்றி தெரிந்துக் கொண்டு இனியாவது (jaggery benefits) நாட்டு சர்க்கரையை பயன்படுத்த முயற்சிப்போம்.

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!

வெள்ளை சக்கரை:

வெள்ளை சக்கரையில் இனிப்பு சுவை மட்டுமே இருக்கும், அவற்றில் வேற எந்த ஒரு நல்ல ஊட்டச்சத்து எதுவும் இல்லை. அது மட்டும் இல்லாமல் நாம் வெள்ளை சக்கரையை அதிகம் உணவு பொருட்களில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு அதிகம் கேடுகளை விளைவிக்கிறது.

மேலும் நம் உடலுக்கு பல வகையான நோய்களை உருவாக்கி நம்மை மரணத்தில் தள்ள அனைத்து வகையிலும் பாடுப்படுகிறது.

எனவே உடலுக்கு கேடை விளைவிக்கும் இந்த வெள்ளை சக்கரை பயன்படுத்துவதற்கு பதில், நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் நாட்டு சர்க்கரையை இனியாவது பயன்படுத்தலாம் வாங்க.

நாட்டு சர்க்கரை நன்மைகள்(Jaggery Benefits):-

நாட்டு சர்க்கரை நன்மைகள்: 1. இரத்தத்தை சுத்தம் செய்ய:

நம் உடலில் ஓடும் இரத்தத்தில், உண்ணும் உணவின் மூலமும், அருந்தும் பானங்களின் மூலமும் பல வகையான தீங்கு நிறைந்த கலோரிகள் சேர்க்கப்படுகின்றது.

எனவே அவற்றை சுத்தம் செய்வதற்கு இந்த நாட்டு சர்க்கரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எனவே தினமும் நாம் அதிகளவு உணவில் நாட்டு சர்க்கரை (jaggery benefits) சேர்த்து வந்தால் உடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.

பால் மற்றும் தயிர் இவற்றில் உள்ள நன்மைகள்..!

நாட்டு சர்க்கரை நன்மைகள்: 2. தேவையற்ற கொழுப்பை கரைக்க:

நாம் உண்ணும் உணவில் பல வகையான கொழுப்புகள், நமது இரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து, உடல் எடை அதிகரித்தல் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தி விடும்.

எனவே நாம் தினமும் நாட்டு சர்க்கரையை (jaggery benefits) அதிகளவு உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுப்பதோடு, இதயம் சம்மந்தமான நோய் வராமலும் தடுத்துவிட முடியும்.

நாட்டு சர்க்கரை நன்மைகள்: 3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

நம் உடலில் எந்த ஒரு வெளிப்புற நோய் தொற்றுகளும் ஏற்படாமல் தடுப்பதற்கு நம் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றாலும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாட்டு சர்க்கரை (jaggery benefits) உதவுகிறது.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் அதிகளவு நாட்டு சர்க்கரையை உட்கொள்ளவும்.

நாட்டு சக்கரை பயன்கள் (Jaggery Benefits):-

  • நாட்டு சக்கரை பயன்கள்: 1.இந்த வெள்ள சக்கரை வருவதற்கு முன் நாம் அதிகமாக பயன்படுத்தியது என்னவென்றால் அது நாட்டு சக்கரை(jaggery benefits). அதை நாம் பயன்படுத்திய வரை நமக்கு எந்த ஒரு நோய்களும் வந்ததில்லை.
  • நாட்டு சக்கரை பயன்கள்: 2.அதுவும் அவற்றில் அதிகமாகவே இரும்புச் சத்து, விட்டமின் மற்றும் பல வகையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றது. அதனால் இது உடலுக்கு அதிகமாக ஆரோக்கியத்தை மட்டுமே வழங்குகிறது.
  • நாட்டு சக்கரை பயன்கள்: 3.கருப்பு சக்கரையில் (jaggery benefits) அதிகமாகவே கனிமச்சத்து உள்ளது. அதனால் இது மிகவும் எளிதில் ஜீரணம் அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
  • நாட்டு சக்கரை பயன்கள்: 4.அது மட்டும் இல்லாமல் உடலில் நோயை உருவாக்கும் கெட்ட அமிலத்தை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
  • எனவே ஆரோக்கியமற்ற வெள்ளை சக்கரையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு, உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய நாட்டு சக்கரையை பயன்படுத்த தொடங்குங்கள்.

பிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –>  Whatsapp Group Link.
Advertisement