பிரண்டை பயன்கள் | Pirandai Uses And Side Effects in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பிரண்டையின் பயன்கள் மற்றும் அதை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் பார்க்கலாம். இந்த செடியை ஆங்கிலத்தில் அடாமண்ட் க்ரீப்பர் | டெவில்ஸ் பேக் போன் | வெல்ட் கிரேப் என்று கூறுவார். மேலும் இதன் அறிவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் மற்றும் இதனை இந்தியில் ஹட்ஜோட் என்றும் அழைக்கப்படுகிறது. சரி வாங்க நாம் பிரண்டையின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
பிரண்டை அறிவியல் பெயர்:
அறிவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குலரிஸ்.
பிரண்டையின் மருத்துவ பயன்கள் – Pirandai Medicinal Uses in Tamil
பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு முறிவை சரிசெய்வதற்கும், எலும்பு தேய்மானம் அடையாமல் இருப்பதற்கும் மற்றும் மூட்டு வலியை சரிசெய்வதற்கும் உதவுகிறது.
செரிமான கோளாறை குணப்படுத்த உதவும் பிரண்டை:
இந்த பிரண்டையை துவையலாக செய்து அதனுடன் இஞ்சி மற்றும் பசு நெய் சேர்த்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடுவதன் மூலம் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தவும் உதவுகிறது.
இதய நோய் வராமல் இருக்க சிசஸ் குவாட்ராங்குலரிஸ்:
உடலில் சேரும் கெட்ட கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சேரும் Cholestrol-ல் ஏற்படும் இதயநோய் மற்றும் Heart Strokeபோன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பிரண்டையின் தண்டு மற்றும் மிளகு சமஅளவு எடுத்துக்கொண்டு துவையல் போல நன்றாக அரைத்து ஒரு நாளில் இரண்டு வேலை எடுத்துக்கொள்வதன் மூலம் மூச்சுதிணறல் வராமல் பாதுகாக்க உதவுகிறது. அலர்ஜி போன்றவைகளையும் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
Pirandai For Weight Loss in Tamil:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்து. உடல் எடையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் எல்டிஎல் கொழுப்பையும், ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது.
பிரண்டையை சுகாதார நலன்களுக்காக எடுத்துக்கொண்டால் நீங்கள் ஒரு நாளில் இரண்டு வேலை கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்தால் மருத்துவர்களை அணுகிவிட்டு சாப்பிடவேண்டும். இல்லையென்றால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பிரண்டையை Supplementary இல்லாமல் எடுத்துக்கொண்டால் அதாவது Powder,Capsule மற்றும் Juiceஆக எடுத்துக்கொள்வதன் மூலம் வாயு, வயிற்றுப்போக்கு, உலர்ந்த வாய், தலைவலி, உடல்சூடு மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.
பிரண்டை தீமைகள்:
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பிரண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிரண்டையை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. ஏனென்றால் இந்த சிசஸ் குவாட்ராங்குலரிஸ் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கலாம்.
பிரண்டையில் அதிக அளவு நன்மைகளும் உண்டு சிறிதளவு பக்கவிளைவுகளும் உண்டு.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>