புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்

Advertisement

புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எதை பற்றி பார்க்கப்போகிறோம் என்றால் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

நாம் உண்ணும் உணவுகளில் எத்தனையோ மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அந்த உணவுகள் நம் உடலில் ஏற்பட கூடிய வியாதிகளையும் குணப்படுத்த கூடியது. அதுபோன்ற உணவுகளின் மூலம் நாம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே ஆங்கில மருந்துகளையே வாங்கி உண்கின்றோம். இதன் மூலம்  நமது உடலில் பல உபாதைகள் வர நாமே காரணமாகிறோம்.

What Is Cancer in Tamil:

புற்றுநோய் (Cancer) என்பது கேடுத் தரும் உடற்கட்டிகளால் ஏற்படக்கூடிய நோய் ஆகும். இது மெல்ல மெல்லக் கொள்ளக்கூடிய நோய் ஆகும். கட்டுப்பாடற்ற உயிரணுக்கள் பிரிந்து அதிகரிப்பதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கத்தின் காரணமாக கேடு தரும் கட்டிகள் உருவாகின்றன. இதை புற்றுநோய் என்று கூறுகின்றனர். இவை உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன நோய் என்று பெயரிடுகின்றனர். புற்றுநோயானது சில உணர்குறிகள், மற்றும் அறிகுறிகள் மூலமாகவும் அல்லது சோதனைகள் மூலமாகவும் கண்டறியப்படுகின்றன. கட்டி, அசாதாரண இரத்தப்போக்கு, நீடித்த இருமல், காரணமில்லா எடை இழப்பு, மலம் கழித்தல்களில் மாற்றம் போன்றவை இதற்கான அறிகுறிகள். இதை ஆரம்பநிலையிலே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் அறிகுறிகள் என்ன

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்:

புற்றுநோய்-உணவுகள்

மருத்துவர்கள் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது தான் சத்தான காய்கறிகளும், பழங்களும் என்று கூறியுள்ளார்கள். நாம் உண்ணும் உணவுகளில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுகளே மருந்தாகவும் இருக்கின்றனர்.

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள்:

காய்கறிகள்:

பச்சைநிற காய்கறிகளில் “பீட்டா கரோட்டீன்” உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. இவைகள் புற்றுநோயை ஆரம்பநிலையிலே தடுத்து நிறுத்தும் ஆற்றல் உடையது. இதில் வலிமையான ஆன்டி ஆக்சிஜிடென்ஸ் உள்ளது. மேலும் இத்தகைய காய்கறிகளில் போலேட்டுகளும் அதிகம் உள்ளன.

பழங்கள்:

மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் புற்றுநோயை தடுக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் காணப்படுகின்றனர். இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளர்வதை தடுக்கிறது. பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை உடல் பெறும் என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

கேரட்:

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால் நுரையீரல், வயிறு, குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம். தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடித்துவந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

பூண்டு:

புற்றுநோய்-உணவுகள்

ஆய்வு ஒன்றில் பூண்டு புற்றுநோயை தடுக்கிறது என்று கூறியுள்ளனர். பூண்டில் உள்ள நோய்எதிர்ப்பு சக்தி மற்றநோய்கள் மட்டுமின்றி புற்றுநோய் செல்களையும் அளிக்கின்றது. எனவே தினமும் நாம் உண்ணும் உணவு பொருட்களில் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

காளான்:

காளான் சாப்பிடுவதால் உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு நோய்எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. காளானில் உள்ள “லெக்ட்டிக்” புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி புற்றுநோய்கள் பரவாமல் தடுக்கிறது.

புற்றுநோய் அடியோடு விரட்டுவதில் திறன் படைத்தது இது தான்

நட்ஸ்:

புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நட்ஸ் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும். இவற்றில் உள்ள “ஆன்டி ஆக்சிஜிடென்ஸ்” புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது.

பப்பாளி: 

papaya

பழங்களுள் ஒன்றான பப்பாளியை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கலாம். மேலும் இதில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிஜிடென்ஸ்கள் நிறைந்து இருப்பதால் இது புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. மேலும் பப்பாளி காயை சமைத்து சாப்பிடுவது நல்லது.

திராட்சை:

திராட்சையில் இருக்கும் ஆன்டி ஆக்சிஜிடென்ஸ் நோய்எதிர்ப்பு சக்தி அதன் தோலில் மறைந்துள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் திராட்சை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கலாம் என்று கூறுகிறது.

புற்றுநோய்க்கு சிறந்த மருந்து தக்காளி: 

நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிஜிடென்ஸ் அதிகம் காணப்படுவதால் இது புற்றுநோய் செல்கள் உற்பத்தியாவதை தடுக்கிறது. தக்காளியில் “லைக்கோபைன்” இருப்பதால் அவை வாய் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் என ஆய்வு ஒன்றில் கூறுகின்றனர்.

மஞ்சள் மற்றும் இஞ்சி:

மஞ்சள் மற்றும் இஞ்சி

மஞ்சளையும் இஞ்சியையும் ஒரு குணமிக்க மூலிகை என்றே கூறலாம். மஞ்சளும் இஞ்சியும் உணவிற்கு சுவைக்கூட்டுபவை மட்டுமல்ல. மஞ்சளையும் இஞ்சியையும் சுவை உள்ள மருந்துகள் என்றும் கூறலாம். மருத்துவர்கள் இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களை விரைவில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது என்று கூறுகின்றனர்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement