பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil

poongar rice benefits in tamil

பூங்கார் அரிசி மருத்துவ பயன்கள் | Poongar Rice Health Benefits in Tamil

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பழக்கவழக்கங்களிலும் சரி உணவு முறையிலும் சரி ஏதாவது ஒரு நன்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் பட்டை தீட்டப்பட்ட அரிசிகள் போல் அல்லாமல் அந்தக்காலத்தில் மனிதனுக்கு சத்துக்களை தரும் அரிசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பெண்களுக்கான  அரிசி என்று பெயர் பெற்ற பூங்கார் அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பூங்கார் அரிசி நன்மைகள்:

poongar rice benefits in tamil

 • இந்த அரிசி 1980-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து காப்பாற்றபட்ட நெல் வகையாகும். இந்த பயிர் வறண்ட நிலம் மற்றும் சிறிய நீர் தேக்கம் போன்ற நிலைகளிலும் வளர கூடியது.
 • இந்த அரிசி “பெண்களுக்கான அரிசி” என்று சொல்வதற்கான காரணம் எந்த விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதை தடுப்பதற்கும் உடம்பில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான சத்தும் இதில் அதிக அளவு உள்ளது.

Poongar Rice Benefits in Tamil – கர்ப்ப காலத்தில்:

 • கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.

பூங்கார் அரிசி

 • சுக பிரசவத்தை விரும்பும் கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலங்களுக்கு பிறகு இந்த பூங்கார் அரிசியை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் சுகப்பிரசவத்துக்கு துணையாக இருக்கும்.
 • மகப்பேறு அடைவதற்கும் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது.
குதிரைவாலி அரிசி பயன்கள்

பூங்கார் அரிசி – சத்துக்களை அதிகரிக்க:

 • விட்டமின்ஸ், மினரல்ஸ் என்று சொல்லக்கூடிய ஜிங்க், அயன், வைட்டமின் பி1, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடன்ட், தயாமின் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.
 • இந்த அரிசியில் வைட்டமின் பி1 இருப்பதால் வயிற்று புண் காரணமாக வரும் அல்சரை குணப்படுத்த உதவுகிறது.

poongar rice benefits in tamil

 • ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • குழந்தைகளுக்கு இந்த அரிசியை உணவில் கொடுப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளை தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும் உதவுகிறது.
 • நம் முன்னோர்கள் பெண்களின் உடல் நலம் சீராக இருப்பதற்கும், எந்த வித தொற்று நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும் பெரிதும் பயன்படுத்தி வந்த அரிசிகளில் இந்த பூங்கார் அரிசி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பூங்கார் அரிசி சமையல்:

 • பூங்கார் அரிசியை நாம் மதிய வேலையில் சாதமாக சாப்பிடலாம். எந்த அரிசியாக இருந்தாலும் அதனை இரண்டு முறை கழுவி விட்டு பின்னரே சமைக்க வேண்டும்.
 • சாதமாக சாப்பிட விரும்பாதவர்கள் இந்த அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து பின் இதனை புட்டு, இடியாப்பம், கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம்.
 • இட்லி செய்வதற்கு இந்த அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து பின், கருப்பு உளுந்து 3:1 அளவில் சேர்த்து மாவாக அரைத்து இட்லி அல்லது தோசையாக செய்து சாப்பிடலாம். இந்த அரிசியை வேக வைத்து சாப்பிடுவதால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை.

பூங்கார் அரிசி விலை:

 • இந்த பூங்கார் அரசியின் விலை ரூபாய் 61/- ஆகும்.
சாமை அரிசி பயன்கள்
கருங்குறுவை அரிசியின் பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil