முருங்கை பிசின் மருத்துவ பயன்கள் | Murungai Pisin Powder Uses in Tamil
முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முருங்கை என்றாலே அந்த மரம் முழுவதும் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முருங்கை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய முருங்கை பிசினை பற்றி உங்களுக்கு தெரியுமா ? முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிவரும். இந்த பதிவில் முருங்கை பிசினுடைய நன்மைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
முருங்கை கீரை நன்மைகள் |
உடல் ஆரோக்கியமாக இருக்க / உடல் கட்டுக்கோப்பாக இருக்க:
உடலை வலுப்படுத்த, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள குறிப்பாக அதிக உடல் எடையிலிருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது இந்த முருங்கை பிசின்.
உடலில் பலன்கள் கிடைக்க:
இந்த முருங்கை பிசினை ஒன்று இரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்து இரவு நேரத்தில் கொதிக்கின்ற நீரில் சேர்த்து அதனை அதிகாலையில் சாப்பிட்டு வர உடலில் பல விதமான நன்மைகள் கிடைக்கிறது.
உடற்பயிற்சி கூடம் சென்று உடலை பல பேர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து 1 மணிநேரம் நடைப்பயிற்சி செய்து முருங்கை பிசினை ஊறவைத்து சாப்பிட்டு அதன் பிறகு எந்த விதமான உணவுகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி செய்து வந்தால் உடலானது நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
ஆண்மை அதிகரிக்க:
முருங்கை பிசினை இடித்து பொடி செய்து பாலில் கலந்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரித்து முகமும் நல்ல பொலிவுடன் காணப்படும்.
முருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் |
காது வலி குணமாக:
பச்சை பிசினை காதில் ஒரு சொட்டு போட்டால் போதும். காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு காது வலி உடனே சரியாகும்.
இளநரை குணமாக:
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்மந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டுவர நரை முடி பிரச்சனை சரியாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |