நாட்டு மருந்து பெயர்கள் | Herbal Powder List in Tamil | நாட்டு மருந்து பொடி வகைகள்

Mooligai Powder Benefits in Tamil

மூலிகை பொடி பயன்கள்..! Mooligai Powder Uses in Tamil

Mooligai Powder Benefits in Tamil / நாட்டு மருந்து பெயர்கள்: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நாட்டு மருந்து பெயர்களையும், அதன் பயன்களையும் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சிலருக்கு இன்றும் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய நாட்டு மருந்து பெயர்களையும் அது என்னென்ன நோய்களை சரி செய்கிறது என்று அறியாமலே இருக்கிறார்கள். உடலில் சிறிது தலைவலி, காய்ச்சல், ஏதேனும் அடிப்பட்ட காயம் ஏற்பட்டால் கூட நாம் மருத்துவமனைக்கு உடனடியாக செல்வோம். இயற்கை மருத்துவம் எல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தியதோடு சரி, இப்போது அவற்றை சரியான முறையில் பெரும்பாலோனோர் பயன்படுத்துவதில்லை. மருத்துவமனைக்கு சென்று வீண் செலவு செய்வதை விட உடலில் ஏற்படக்கூடிய சிறிய காயங்கள், லேசான தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு நாட்டு மருந்து போன்றவை பயன்படுத்தி உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுவோம்..! சரி வாங்க நண்பர்களே இப்போது நாட்டு மருந்து பொடிகளின் பெயர்களையும் (herbal powder list in tamil), அது என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்..!

newமூலிகை பயன்கள்

நாட்டு மருந்து பொடி வகைகள் | herbal powder list in tamil:

நாட்டு மருந்து பொடி / நாட்டு மருந்து பொடி வகைகள்நாட்டு மருந்து பெயர்கள்குணமாகும் நோய் / நாட்டு மருந்து பெயர்கள் பயன்கள்
ஜாதிக்காய் பொடி ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி பிரச்சனை நீங்கும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
ஓரிதழ் தாமரை பொடிஓரிதழ் தாமரை பொடிஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமாகும்.
ஆவாரம் பூ பொடிஆவாரம் பூ பொடிஇதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு இந்த பொடி மிகவும் சிறந்தது.
ரோஜாபூ பொடி ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு நல்லது, உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

நாட்டு மருந்து பொடி வகைகள்:

நாட்டு மருந்து பொடி / நாட்டு மருந்து பொடி வகைகள்நாட்டு மருந்து பெயர்கள்குணமாகும் நோய் / நாட்டு மருந்து பெயர்கள் பயன்கள்
அருகம்புல் பொடி அருகம்புல் பொடி அதிக உடல் எடையை குறைக்க, தேவையில்லாத கொழுப்பை நீக்கும், சிறந்த ரத்தசுத்தி. 
நெல்லிக்காய் பொடி நெல்லிக்காய் பொடி நெல்லிக்காய் பொடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் பற்கள் எலும்புகள் பலப்படும். 
கடுக்காய் பொடி கடுக்காய் பொடி குடலில் இருக்கும் புண்களை மிக விரைவாக இந்த கடுக்காய் பொடியானது ஆற்றும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். 
வில்வம் பொடி வில்வம் பொடி நமது உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்புகளை குறைக்கும் சக்தி இந்த வில்வம் பொடிக்கு உள்ளது. இரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும். 
அமுக்கரா பொடி அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.  
newவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகள்
சிறுகுறிஞ்சான் பொடிசிறுகுறிஞ்சான் பொடிசர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த சிறு குறிஞ்சான் பொடியை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும். 
நாவல் பொடி நாவல் பொடி உடலில் சர்க்கரை நோய் இருப்பவர்கள், தலை சுற்றல் பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பொடியை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 
வல்லாரை பொடி வல்லாரை பொடி ஞாபக சக்தி-யை அதிகரிப்பதற்கு, நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு வல்லாரை பொடியை பயன்படுத்தி வரலாம். 
தூதுவளை பொடி தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா நோய், வறட்டு இருமல் போன்ற பிரச்சனைக்கு தூதுவளை பொடி நல்ல நிவாரணம் கொடுக்கும். 
துளசி பொடி துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாரு பிரச்சனைக்கு துளசி பொடி நல்ல தீர்வு அளிக்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்