வரகு அரிசி தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

வரகு அரிசி தீமைகள் | Varagu Arisi Side Effects 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நம் ஆரோக்கியம் பதிவில் வரகு அரிசி சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். வரகு அரிசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு. இருந்தாலும் இந்த வரகு அரிசி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் இதில் தீமைகளும் அடங்கியுள்ளது. வாங்க நண்பர்களே இதனால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது என்பதை பார்ப்போம்.

வரகு அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

வரகு அரிசி

அன்றைய காலகட்டத்தை போலவே இந்த காலகட்டத்திலும் நம் அன்றாட வாழ்வில் அரிசி, கோதுமை போன்ற உணவுகள் மட்டுமல்லாமல் சிறு தானிய உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டு வருகிறோம். சிறுதானியங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கால்சியம், புரதம், இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருந்தாலும் இவற்றை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதால் சில தீமைகளை தருகிறது. தானியங்களில் சிறந்தது வரகு அரிசி. இந்த வரகு அரிசி பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரகு அரிசி ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. இருந்தாலும் இந்த வரகு அரிசியை உணவுப் பொருளாக அதிகளவு எடுத்து கொள்வதால் சில பக்கவிளைவுகள் உண்டாகிறது.

  • தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் வரகு அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அரிப்பு, தோலில் எரிச்சல், சொரியாசிஸ் போன்ற பிரச்னை உள்ளவர்கள் இந்த வரகு அரிசி சாப்பிடுவதால் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் இந்த வரகு அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடலிலுள்ள நீரை வெளியேற்றுகிறது. உடலிலுள்ள நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் வரகு அரிசி உணவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு தோலில் தேமல், தோல் வறட்சி, தோலில் எரிச்சல், உடல் முழுவதும் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கவுனி அரிசி மருத்துவ பயன்கள்
  • கர்ப்பகாலத்தில் பெண்கள் இந்த வரகு அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வரகு அரிசி சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, வரகு அரிசி சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.
  • இதை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதனால், குமட்டல், வாந்தி மற்றும் மலசிக்கல் போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.
  • உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த வரகு அரிசி உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips