வெந்தயம் தீமைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் வெந்தயம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் சில பக்கவிளைவுகளை பற்றித்தான் தெரிந்த கொள்ளப்போகிறோம். பொதுவாகாவே வீட்டில் அதிகமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் வெந்தயமும் ஒன்றாகும். வெந்தயத்தில் அதிகமான குளிர்ச்சி இருப்பதால் இதை பெரும்பாலும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பல விதமான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு தலை முடி வளர்ச்சி மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, எவ்வளவுதான் பயன்கள் இருந்து வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது, மேலும் வெந்தயத்தின் தீமைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா.? |
வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
வெந்தயத்தை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, கர்ப்ப காலங்களில் வெந்தயத்தை அதிகமாக உபயோகிக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
வெந்தயத்தை தினமும் அதிக அளவில் எடுத்து கொள்ளும் பொழுது உடலில் தேவையில்லாமல் அதிகமான வியர்வைகள் காணப்படும்.
பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த போக்கின் போது, வெந்தய விதைகளை எடுத்துக்கொண்டால், சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இவை குளிர்ச்சி அதிகம் நிறைந்ததால் தலைவலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
சிலருக்கு ஒவ்வாமை ஏற்பாடு முக்கிய காரணமாக வெந்தயம் இருக்கிறது, ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு தோன்றும் ஒவ்வாமை அறிகுறிகள் மார்பு வலி, முகத்தில் வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெந்தயத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ளும் பொழுது அதன் டெரடோ ஜெனிக் திறன் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்ளும் பொழுது வெந்தயத்தை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவை குறைத்து உடலில் பலவிதமான பிரச்னைகளை உண்டாக்குவதற்கு வழிசெய்கிறது.
வெந்தயத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தோல் பிரச்சனைகள் ஏற்பட்டு, உடல் முழுவதும் சிவப்பாக வீக்கம் ஏற்பட காரணமாகவும் உள்ளது.
அதேபோல் வெந்தயத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு, குமட்டல், வாயு பிரச்சனைகள் மற்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது அதிகமான துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
வெந்தயத்தை அழகு சார்ந்த பராமரிப்புகளுக்காக முகத்தில் பூசி கொள்ளும் பொழுது மென்மையாக இருந்தாலும், அதை சாப்பிடும் பொழுது முகத்திற்கு அதிக அளவில் வறட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகிறது.
மேலும் நீங்கள் இதை குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது, இதை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நெஞ்சி எரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் சில பக்கவிளைவுகளும் ஏற்படும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |