அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க
தங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருக்கிறதா.. அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. ஒரு நாளைக்கு பல முறை சிறுநீர் சிறுநீர் கழிக்கும் போது அது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கு செல்வதற்கு கூட அதிகளவு தயங்குவோம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது அதனுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளை உருவாக்கும் மற்றும் ஒரு நபரின் தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும். ஆகவே உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை இருந்தால் உங்க உணவில் சில வகை உணவுகளை சேர்ப்பது மிகப்பெரிய நன்மை அளிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க கீழ்க்கண்ட சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள்:
சராசரியாக, ஒரு மனிதன் 24 மணி நேரத்தில் 7 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது என்பது வழக்கமானது. இது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியாது என்றாலும் கூட, குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக தடவை சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக கருதப்படுகிறது.
அடிக்கடி சிறுநீர் போவதென்பது குறிப்பாக இரவில் அதிகமாக இருக்கும், வழக்கமான இது உங்கள் முழு நீள துக்க சுழற்சிக்கு இடையூறாகவும் மற்றும் நாள் முழுவதும் மந்தமாகவும் மற்றும் அரைத்தூக்க நிலையை ஏற்படுத்தும்.
அடிக்கடி சிறுநீரகம் கழிப்பதன் காரணமாக, தாகம் பொதுவாக அதிகரிக்கும்.
சில அசாதாரண அறிகுறிகளாவன:
- காய்ச்சல் மற்றும் குளிர்தல்.
- முதுகு வலி அல்லது அடிவயிற்று வலி.
- சிறுநீர் கழித்தலின் போது அசாதாரணமாக ஏதாவது வெளியேறுதல்.
- குமட்டல் உணர்வு.
சிறுநீர் அதிகமாக வெளியேற காரணம்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது அதிகப்படியான திரவங்களை குடிப்பதனாலும் அல்லது மிகுந்த குளிர்ந்த சூழலாலும் இது போன்ற ஒரு உளவியல் மாற்றம் காரணமாக இருக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய்க்குறி இருப்பவர்களுக்கும் கூட அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் பாதிக்கப்படுகிறார்கள்.சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் மிகைப்புச் சிறுநீர்ப்பை.
ஆகியவை அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் ஒருவித அறிகுறியாகும்.
பெண்களில், மாதவிடாய் அல்லது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பை கற்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான மற்றொரு காரணமாகும்.
சில நேரங்களில், வலிப்பு நோய்க்கு தரப்படும் எதிர்ப்பு மருந்துகளும் கூட இந்த அறிகுறியை உண்டாக்கலாம். உங்களுக்கு சர்க்கரை வியாதி இல்லை.. ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறீர்களா அப்படியென்றால் கீழ் கூறப்பட்டுள்ள டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தினந்தோறும் பாலோ பண்ணுங்கள் நல்ல ரிசல் கிடைக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க –
Adikkadi Siruneer Kalithal Theervu:
மாதுளை தோல்:
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க – மாதுளை தோல் சிறுநீரகத்தில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. மாதுளை தோலை எடுத்து பேஸ்ட்டாக்கி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என குடித்து வாருங்கள். இதை நீங்கள் 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கொள்ளு:
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவை சரி செய்ய கொள்ளு உதவுகிறது. கொள்ளு தானியத்தில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. சில கொள்ளு தானியங்களை எடுத்து வெல்லத்துடன் சேர்த்து தினமும் காலையில் மருந்து மாதிரி சாப்பிட்டு வாருங்கள். இது சிறுநீரக பிரச்சினையை களைய உதவுகிறது.
எள் விதை:
எள் விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இதுவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது. எள் விதைகளை சிறிது எடுத்து கேரம் விதைகளுடன் வெல்லம் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இது அடிக்கடி சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது.
வேகவைத்த கீரை:
அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க – வேக வைத்த கீரை எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பதை போக்க உதவுகிறது. எனவே உங்க இரவு உணவில் கீரையை சேர்த்து வருவது உங்க சிறுநீரக பிரச்சினையை போக்க உதவுகிறது. கீரை உங்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
தண்ணீர் அதிகம் குடியுங்கள்:
நிறைய தண்ணீர் குடிப்பது உங்க உடலை நீரேற்றமாக வைக்கவும், உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரக செயல்பாட்டை பாதுகாப்பாக வைக்கவும் உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் வரையாவது எடுத்து வாருங்கள். நன்மை கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |