வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாதாம் VS வேர்க்கடலை இரண்டில் எது சிறந்தது..?

Updated On: December 26, 2022 4:02 AM
Follow Us:
Almonds Vs Peanuts in tamil
---Advertisement---
Advertisement

Almonds Vs Peanuts in tamil

இன்றைய ஆரோக்கியம் பதிவில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதம் சிறந்ததா..? வேர்க்கடலை சிறந்ததா..? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சிலருக்கு பாதாம் மிகவும் பிடிக்கும். சிலர் வேர்க்கடலையை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இரண்டுமே ஊட்டச்சத்து அதிகம் உள்ள பொருள் தான். இருந்தாலும் பாதாம் மற்றும் வேர்க்கடலை இரண்டிற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பாதாம் பயன்கள்..! Badam Benefits in Tamil..! பாதாம் சாப்பிடும் முறை..!

பாதாம் VS வேர்க்கடலை: 

Almonds Vs Peanuts in tamil

பாதாம் மற்றும் வேர்க்கடலை இரண்டிலும் ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தான் காணப்படுகின்றன. மேலும் இவை இரண்டுமே சமமான அளவில் நுண்ணூட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளன. இருந்தாலும் வேர்கடலையானது பாதம் பருப்பை விட பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் குழந்தைகள் வேர்க்கடலையை விட பாதாமை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை பற்றி பார்ப்போம்.

வேர்க்கடலை  பாதாம் 
100 கிராம் வேர்க்கடலையில் 567 கி கலோரி உள்ளது. பாதம் பருப்பில் 579 கி அளவில் கலோரி உள்ளது
நிலக்கடலையில் 25.8 கி புரதம்  காணப்படுகிறது. ஆனால் பாதம் பருப்பில் 21.2 கி அளவில் தான் புரதம் உள்ளது.
கார்போஹைட்ரேட்டுகள் 16.1 கி அளவில் காணப்படுகின்றன. இதில் கார்போஹைட்ரேட்டுகள் 21.6 கி அளவில் உள்ளன.
இதில் 4.7 கி அளவில் சர்க்கரை உள்ளது. பாதம் பருப்பில் 4.4 கி அளவில் சர்க்கரை உள்ளது.
வேர்க்கடலையில் 6.5 கி அளவு நீர்ச்சத்து இருக்கிறது. இதில் நீர்ச்சத்து 4.4 கி அளவு இருக்கிறது.
இதில் 49.9கி கொழுப்பு உள்ளது. பாதம் பருப்பில் 49.2 கி கொழுப்பு  உள்ளது.
வேர்க்கடலையில் வைட்டமின் ஈ சத்துக்கள் 8.3 மி.கி அளவு உள்ளன. இதில் 25.6 மி.கி அளவில் வைட்டமின் ஈ சத்து காணப்படுகிறது.
இதில் 240µg அளவு ஃபோலேட் உள்ளது. பாதமில் 44µg அளவு ஃபோலேட் இருக்கிறது.
வேர்க்கடலையில் 12.1 மி.கி அளவில் நியாசின் காணப்படுகிறது. இதில் 3.6 மி.கி அளவு நியாசின் உள்ளது.
இதில் 92 மி.கி அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. பாதம் பருப்பில் 269 மி.கி அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது.
வேர்க்கடலையில் 4.6 மி.கி அளவில் இரும்புச் சத்து காணப்படுகிறது. பாதமில் 3.7 மி.கி அளவு இரும்புச் சத்து இருக்கிறது.
இதில் 18 மி.கி அளவு சோடியம் இருக்கிறது. பாதம் பருப்பில் 1 மி.கி அளவு சோடியம் உள்ளது.
வேர்க்கடலையில் 705 மி.கி அளவு பொட்டாசியம் உள்ளது. பாதம் பருப்பில் 733 மி.கி அளவு பொட்டாசியம் இருக்கிறது.
இதில் 376 மி.கி அளவு பாஸ்பரஸ் காணப்படுகிறது. பாதமில் 481 மி.கி அளவு பாஸ்பரஸ் உள்ளது.
வேர்க்கடலையில் 168 மி.கி அளவு  மெக்னீசியம் சத்து காணப்படுகிறது. உள்ளது. இதில் 270 மி.கி அளவு மெக்னீசியம் உள்ளது.
இதில் 3.3 மி.கி அளவு துத்தநாகம் உள்ளது. பாதம் பருப்பில் 3.1 மி.கி அளவு  துத்தநாகம் இருக்கிறது.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதம் பருப்பை விட வேர்க்கடலை தான் சிறந்தது. பாதாமை விட வேர்க்கடலையில் தான் அதிக சத்துக்கள் இருக்கிறது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now