படிகாரம் பயன்கள் | Alum Stone Benefits in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் படிகார கல் பயன்கள் (Padikaram Stone Benefits in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். படிகார கல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நம்மில் பலருக்கும் படிகார கல்லின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக படிகாரம் பயன்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
திருஷ்டிக்காக வீட்டின் வாசல்களில் கட்டப்படும் படிகாரம் கற்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா? உங்களுக்கு… அட ஆமாங்க இந்த படிகாரம் கல் உடலில் ஏற்படும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. சரி வாங்க இந்த பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த படிகாரம் பயன்கள் (Padikaram Uses In Tamil) சிலவற்றை இங்கு படித்தறிவோம்..!
படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..! |
Padikaram Stone Benefits in Tamil:
முகப்பரு மறைய:-
சிலருக்கு முகத்தில் அதிகளவு முக பருக்கள் தோன்றும், இதன் காரணமாக அவர்களது சருமம் அழகிழந்து காணப்படும். இந்த முகப்பரு நீங்க படிகாரம் சிறந்த தீர்வினை அளிக்கின்றது. படிகாரத்தை சிறிதளவு எடுத்து அதனை தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.
இந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும், இவ்வாறு ஒரு சில நாட்கள் செய்து வர முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து விடும்.
நகச்சுற்று குணமாக:-
நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்ய படிகாரம் மிகவும் பயன்படுகின்றது. இந்த படிகாரத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு இந்த பேஸ்ட்டினை நகச்சுற்று உள்ள நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர நகச்சுற்று சரியாகிவிடும்.
நகம் சொத்தை சரியாக படிகாரம்:
நகம் சொத்தை குணமாக படிகாரம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த படிகாரத்தை பொறித்து தண்ணீர் சேர்த்து அரைத்து, நகம் சொத்தை உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர நகம் சொத்தை சரியாகிவிடும்.
வியர்வை துர்நாற்றம் நீங்க:-
சிலருக்கு உடம்பில் அதிகளவு வியர்வை துர்நாற்றம் வரும். அவர்கள் தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கி விடும்.
குதிகால் வெடிப்பு நீங்க:-
சிலருக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்பு ஏற்படும். அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தி நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர ஒரு சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.
சரும பிரச்சனைகள் நீங்க:-
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகம் வறட்சி நீங்க படிகாரம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.
இந்த படிகாரத்தை பொடி செய்து தேவையான அளவு எடுத்து, சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |