தினமும் அவித்த முட்டை சாப்பிடலாமா.! அப்படி சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா ..!

avitha muttai benefits in tamil

தினமும் முட்டை சாப்பிடலாமா

முட்டை பிடிக்காது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் முட்டையில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டைகளை பல விதமாக சாப்பிடுவார்கள். அதாவது முட்டையை பொறித்து, வறுத்து, ஆப்லெட், ஆபாயில் போன்று பல முறைகளில் சாப்பிடுவார்கள். முட்டையை சுவையாக செய்து கொடுத்தால் தான் சில நபர்கள் சாப்பிடுவார்கள். சில நபர்கள் முட்டையை எப்படி கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். இந்த பதிவில் முட்டையை அவித்து சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

அவித்த முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

தினமும் அவித்த முட்டை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைத்து உடல் எடையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.

முட்டையில் உள்ள லூடின், லீக்சைக் தைன் போன்ற பொருட்கள்  கண் பார்வை தெளிவாக தெரிய உதவுகிறது. மேலும் கண் சம்மந்தப்பட்ட எந்த பிரச்சனைக்கும் முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது. 

இதையும் படியுங்கள் ⇒ தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன பயன்..!

முட்டையில் கோலைன் என்ற சத்து நரம்பு மண்டலம், இதய மண்டலம் போன்றவற்றை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் மூளையின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவித்த முட்டை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் பலத்தை அதிகப்படுத்திக்கலாம்.

முட்டையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு தினமும் அவித்த முட்டை கொடுப்பது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

புற்று நோய் பிரச்சனை வராமல் அவித்த முட்டை நம்மை பாதுகாக்கிறது.

புரதசத்து குறைவாக உள்ளவர்கள் தினமும் 2 அவித்த முட்டை சாப்பிட்டு வருவது நல்ல பலனை தரும்.

தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்.?

குழந்தைகளுக்கு தினமும் 1 முட்டை கொடுக்கலாம். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் முட்டையை எடுத்து கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் 1 முட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்கள் உடம்பிற்கு எவ்வளவு கலோரிகள் தேவைப்படுகிறோதோ அந்த அளவிற்கு முட்டையை எடுத்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ காடை முட்டை பயன்கள்

இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!