இந்த ஜூஸை தினமும் குடித்தால் உடல் எடை குறையுமாம் உங்களுக்கு தெரியுமா.?

beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்

வணக்கம்  நண்பர்களே..! பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். பீட்ரூட்டை சமைத்து கொடுத்தாலே யாரும் சாப்பிடமாட்டார்கள். மற்ற காய்கறி போல பீட்ரூட்டை விரும்பமாடடார்கள். ஆனால் இதில் சத்துக்கள் ஏராளம். மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரைட், காப்பர், கால்சியம், இரும்புசத்து, மாங்கனீசு ஜிங்க் இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உணவு சமைத்து சாப்பிட முடியவில்லை என்றால் ஜூஸ் செய்து குடியுங்கள். வாங்க பீட்ரூட்  ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித்தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ ஆரோக்கியத்திற்கு 5 ஜி தேவை..! இதை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்தால்:

பீட்ரூட்டில் இரும்பு சத்து மற்றும் பி1  அதிகமாக இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்களை அதிகப்படுத்தும். ரத்த சிவப்பணுக்கள்  குறைவாக இருந்தால் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்கும் அதுமட்டுமில்லாமல் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைத்திருக்கும். உடலில் உள்ள நச்சு கிருமிகளை வெளியேற்றும்.

  இந்த ஜூஸில் கலோரிகள் குறைவாக இருக்கும். இதில் நார்சத்து அதிகமாக உள்ளது. ஆனால் கொழுப்பு கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இந்த ஜூஸை குடிக்கலாம்.  

பீட்ரூட்டில் நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். குடலை சுத்தமாக வைத்து கொள்ள உதவும். வயிறு வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வாரத்தில் 3 முறை குடிக்க வேண்டும்:

உணவு முறை  மாற்றங்கள் அல்லது காரமாக உணவு எடுத்து கொண்டாலும் சிலருக்கு வயிறு எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம். உணவில் சேர்த்து பிடிக்கவில்லை என்றால் ஜூஸாக குடியுங்கள்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதயம் சீராக இயங்கி இதயத்தை வலிமை பெற செய்கிறது. இதய பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.

உடல் அடிக்கடி சோர்ந்து விடுபவர்கள் தாராளமாக பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். உடலை புத்துணர்ச்சி பெற்று  சுறுசுறுப்பாக்குகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips