ஓமம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! Ajwain Seeds Benefits..!

ஓமம் மருத்துவ பயன்கள்..! Omam Benefits In Tamil..!

health Benefits Of Ajwain: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இந்தியாவில் மலைதேச பகுதிகளில் பயிராகின்ற நல்ல மனமுள்ள செடி வகையினை சேர்ந்த தாவரத்தின் விதையை தான் ஓமம் என்று நாம் சொல்கிறோம். ஓமத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதோடு ஓமத்தில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இந்த ஓமத்தின் மருத்துவ பயன்களை பற்றித்தான் இந்த பதிவில் முழுமையாக நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

newநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரின் பயன்கள்..! Kabasura Kudineer Benefits..!

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

மூச்சு பிரச்சனையை குணப்படுத்தும் ஓமம்:

சிலருக்கு உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சிலர் உடல் பலமாக இருப்பது போல் தோன்றுவார்கள். ஆனால் சிறிய பொருளை எடுத்தாலோ, படிக்கட்டுகள் ஏறி வந்தாலோ அதிக மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். இது போன்று உள்ளவர்கள் ஓமத்தினை நீரில் கொதிக்கவைத்து இதனுடன் சிறிதளவு கருப்பட்டியை சேர்த்து காலையில் குடித்துவர உடல் நன்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

பசியின்மையை போக்கும் ஓமம்:

பசி மற்றும் தூக்கம் இல்லாமல் பலர் சிரமப்படுவார்கள். நன்கு பசி எடுக்க, வயிற்று சம்மந்தமான பிரச்சனைகள், நாம் உண்ட உணவானது செரிமானம் ஆகுவதற்கு ஓமத்தினை கஷாயம் வைத்து குடித்து வரலாம்.

வாயு தொல்லையை நீக்கும் ஓமம்:

வாயு தொல்லை இருப்பவர்கள் ஓமம், சுக்கு, கடுக்காய் பொடி போன்றவற்றை சமமான அளவிற்கு எடுத்துக்கொண்டு பொடி செய்து சலித்து வைத்துக்கொள்ளவும். இந்த பொடியை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடித்து வந்தால் கண்டிப்பாக வாயு தொல்லை நீங்கிவிடும்.

வயிற்று உப்புசம் நீக்கும் ஓமம்:

உடலில் உள்ள உமிழ்நீரை அதிகரிக்கும் ஓமத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் அஜீரணம், அதிசாரம், வயிற்று உப்புசம், சீதபேதி போன்ற நோய்கள் குணமடைய செய்யும்.

சளி/ மூக்கடைப்பு நீங்க ஓமம்:

சளி, மூக்கடைப்பு குணமாக ஓமத்தினை ஒரு துணியில் கட்டி நுகர்ந்து வர சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.

வீக்கங்கள் கரைய ஓமம்:

ஓமத்தினை தேவையான அளவிற்கு நீர்விட்டு பேஸ்ட் போல் அரைத்து இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து வாணலியில் சிறிதுநேரம் ஹுட் செய்து களிம்பு போல் ரெடி செய்து வீக்கங்கள் உள்ள இடங்களில் இந்த களிம்பினை கட்டிவர வீக்கங்கள் விரைவில் குணமாகும்.

newயூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..! Uric Acid Treatment in Tamil..!

ஆஸ்துமா நோய் குணமாக ஓமம்:

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் 1/2 டீஸ்பூன் ஓமம் எடுத்து 1 லிட்டர் நீரில் நன்றாக கொதிக்கவைத்து குடித்துவர ஆஸ்த்மா குணமாகும். அதோடு வயிற்று செரிமான பகுதியும் சீராக இருக்கும்.

வயிற்று வலி நீங்க ஓமம்:

சிலருக்கு வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். அதனால் 5 கிராம் அளவு ஓமத்துடன் சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடியாக செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுவலி நீங்கிவிடும்.

மூட்டு / பல் வலி குறைய ஓம எண்ணெய்:

மூட்டு வலி இருப்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஓம எண்ணெயினை தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

அதோடு பல் வலி உள்ளவர்கள் இந்த ஓம எண்ணெயினை சிறிய பஞ்சில் வைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி வர பல் வலி நீங்கும்.

நெஞ்சு சளி நீங்க ஓமம்:

ஓம பொடி சிறிதளவு, உப்பு தேவையான அளவு எடுத்து மோரில் கலந்து குடித்துவர நெஞ்சு சளி என்று கூறும் சளி தொல்லை வெளியேறும்.

தொப்பை குறைய ஓமம்: 

தினமும் இரவில் தூங்கும் முன் அன்னாசி பழ துண்டுகள் 4, ஓம பொடி 2 ஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்கவைக்க வேண்டும். அன்னாசி நன்றாக வெந்த பிறகு இதனை மூடிவைக்க வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து இதனை கரைத்து குடிக்கவேண்டும். இதனை 15 நாட்கள் செய்து வர தொப்பை குறைந்துவிடும்.

இடுப்பு வலி நீங்க ஓமம்:

தண்ணீரில் 1 ஸ்பூன் அளவிற்கு ஓமம் போட்டு கொதிக்கவைக்க வேண்டும். இதனுடன் 100 ml தேங்காய் எண்ணெயை விட்டு கொதிக்கவைக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி கொள்ளவும். வடிகட்டிய பிறகு கற்பூரப்பொடியை கலந்து இளஞ்சூட்டுடன் தடவி வர இடுப்பு வலி நீங்கும்.

newதினமும் நல்லெண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்