பருப்பை எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.!

Benefits of soaked lentils in tamil

பருப்பை சமைப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பருப்பை எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். பருப்பை எப்படி சமைப்பது என்று சொன்னவுடன் சமையல் குறிப்பு என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் பருப்பு அல்லது பயறு வகைகளை சமைக்கும் போது அதை எப்படி சமைப்பீர்கள்.? சாம்பார் வைக்கும் பருப்பை கழுவிட்டு கொதிக்கும் தண்ணீரிலோ அல்லது குக்கரிலோ சேர்ப்பீர்கள். இது சரியானதா என்று கேட்டால் இல்லை இந்த பழக்கம் முற்றிலும் தவறானது. பருப்பை இப்படி சமைத்தால் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். பருப்பை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ தேனில் ஊற வைத்து சின்ன வெங்காயம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ..?

பருப்பை ஊற வைக்க வேண்டும்:

அனைவருமே பருப்பை கழுவிட்டு தான் சமைப்பார்கள். ஆனால் பருப்பை ஊற வைத்து தான் சமைக்க வேண்டும் யாருக்காவது தெரியுமா.? ஆமாம் நண்பர்களே.! நீங்கள் பருப்பை சமைப்பதற்கு முன்னால் ஊற வைத்து சமையுங்கள்.

பருப்பை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

பருப்பை ஊற வைத்து சமைக்கும் பொழுது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் தண்ணீரில் நீங்கி விடும். பருப்புகளில் ஒலிகோசாக்கரைடுகள் என்ற செல் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் முக்கியமாக உடல் தசைகளில் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் பருப்பை ஊறவைத்து சமையுங்கள்.

மேலும் பருப்பை ஊறவைத்து சமைப்பதினால் கால்சியம் மற்றும் இரும்பு சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது. எல்லா வகை பருப்புகளும் செரிமானம் ஆக கூடியது தான். ஆனால் ஊற வைத்து சமைக்கும் பொழுது செரிமானம் சக்தியை பலப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் பருப்பை ஊற வைத்து சமைப்பதினால் விரைவாக வெந்துவிடும். சமையலை சீக்கிரமாக செய்துவிடலாம்.

பருப்பு ஊற வைத்த தண்ணீரை மறந்தும் கூட சமையலுக்கு பயன்படுத்தி விடாதீர்கள். ஏனென்றால் பருப்பு ஊற வைத்த தண்ணீரில் பைடிக் அமிலம் அதிகம் உள்ளது. அதனால் சமையலுக்கு பயன்படுத்த கூடாது.

பருப்பு மட்டுமில்லை நீங்கள் எந்த பொருட்களை ஊற வைத்தாலும் அந்த தண்ணீரை  சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அதில் உள்ள இரசாயனம் மற்றும் கழிவுகள் நீங்கப்பட்டிருக்கும். அந்த தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்து போது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்