பாகற்காயின் மருத்துவ பயன்கள் | Bitter Gourd Benefits in Tamil

Advertisement

பாகற்காய் மருத்துவ பயன்கள் | Bitter Gourd Uses in Tamil

பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக இந்த பாகற்காயின் பெயரை கேட்டாலே ஒரு சிலர் முகம் சுழிப்பதுண்டு. கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது கொடி வகையை சார்ந்தது. பாகற்காய் ஆசியா முழுவதும் விளைகிறது. இது எவ்வித பருவகால வேறுபாடுமின்றி அனைத்து சூழ்நிலைகளிலும் கிடைக்கும் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் மோமோர்டிகா சரண்டியா. பாகற்காயில் ஏராளமான விட்டமின்களும், புரோட்டீன்களும் நிறைந்துள்ளன. பாகற்காயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன அவை எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது என்பதையெல்லாம் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

Benefits Of Bitter Gourd in Tamil – பாகற்காயில் உள்ள சத்துக்கள்:

  • 92-95கி உள்ள பாகற்காயில் 2 கிராம் அளவு நார்ச்சத்து, 4-5% வரை இரும்பு சத்துக்களான ஜிங்க், பொட்டாசியம் அதிக அளவு உள்ளது.

bitter gourd benefits in tamil

  • அதிக அளவு வைட்டமின் ஏ, 90% வைட்டமின் சி, கேட்டோஜின், Gallic Acid, Chlorogenic Acid போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

சருமத்தை பாதுகாக்க – Bitter Gourd Uses in Tamil:

bitter gourd benefits in tamil

  • பாகற்காயில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் இருப்பதால் சருமத்தில் செல்கள் சிதைவடையாமல் இருப்பதற்கும், கண் பார்வை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இதில் கால்சியம் சத்தும் உள்ளது.

Bitter Gourd Health Benefits in Tamil  – சர்க்கரை நோயை குணப்படுத்த:

bitter gourd health benefits in tamil

  • சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு சிறந்த மருந்து. இதில் இருக்கும் Keratin Polypeptide இருப்பதால் உடம்பில் இன்சுலின் சுரக்கும் அளவை கட்டுக்குள் வைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

பாகற்காய் பயன்கள் – உடல் எடையை குறைக்க:

bitter gourd uses in tamil

  • பாகற்காயில் இருக்கும் Chlorogenic Acid மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்  உடம்பில் இருக்கும் கொலெஸ்ட்ரால், ட்ரை கிளிசரைட், LDL கொழுப்பு போன்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து HDL போன்ற நல்ல கொழுப்பு அமிலங்களை அதிகரிக்கிறது. கெட்ட கொழுப்புகளை கரைக்கும் திறன் பாகற்காயில் இருப்பதால் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
காளான் பயன்கள்

அல்சரை குணப்படுத்த – Bitter Gourd Uses in Tamil:

  • வயிற்றில் உள்ள குடல் புழுக்கள், வயிற்று புண் (அல்சர்), சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றை தடுக்கவும் பயன்படுகிறது.

bitter gourd juice benefits in tamil

  • மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாகற்காய் உதவுகிறது.
சிறுகீரை பயன்களை பற்றி தெரிந்து கொள்வோமா?

இதயநோய் வரமால் தடுக்க – Bitter Gourd Health Benefits in Tamil:

  • மஞ்சள் காமாலை குணமாக பாகற்காய் ஜூஸுடன் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வரவும். செரிமான கோளாறுகளை சரிசெய்யவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

bitter gourd benefits in tamil

  • பாகற்காயை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் கணைய புற்றுநோய் வரமால் தடுக்கவும், இதயத்தை பாதுகாப்பதற்கும் உதவுகிறது. பாகற்காய் அல்லது அதன் இலையை வேக வைத்து சாப்பிடுவதால் சருமநோய்கள், காயம், பருக்கள் சீக்கிரம் குணமடையும்.

பாகற்காய் தீமைகள் – Bitter Gourd Disadvantages in Tamil:

  • பாகற்காய் அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • வேறு ஏதேனும் தொற்றுக்களால் ஆங்கில மருந்து எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு இது உடல் உபாதைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் அறிவுரையை கேட்டு பின் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement