கருப்பு பூண்டு பயன்கள் – Black Garlic Benefits in Tamil
இந்தியா மற்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் உணவாக கருதப்படுவது கருப்பு பூண்டு என்று சொல்லலாம். இந்த கருப்பு பூண்டை நாம் சாப்பிடுவதினால் நமது உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். இந்த கருப்பு பூண்டு என்பது ஒரு முழு பூண்டு, இது பல வாரங்களாக கட்டுப்படுத்தப்பட்ட உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் தயாரிக்கப்படுகிறது. இதனுடைய தாயகம் தாய்லாந்து ஆகும். இந்த பூண்டு அனைத்து கடைகளிலும் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு இல்லை, ஆன்லைனில் கிடைக்கிது. ஆக இந்த கருப்பு பூண்டின் மகிமையை அறிந்தவர்கள் ஆன்லைனில் இப்பொழுது கருப்பு பூண்டை ஆர்டர் செய்து சாப்பிடுங்கள். சரி வாங்க இந்த கருப்பு பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
கருப்பு பூண்டு சத்துக்கள்:
இந்த கருப்பு பூண்டி இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது. மேலும் மாங்கனீசு, துத்தநாகம், லூடின், செலினியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் B, C, K போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்கள் இந்த கருப்பு பூண்டில் அதிகளவு நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதினாலோ என்னவோ தெரியவில்லை இந்த கருப்பு பூண்டின் ஒரு கிலோ விலை சந்தையை 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நொதித்தல் முறைக்கு உட்படுத்தப்படுவதால் இதில் தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது. மேலும் பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்காய்டுகளும் உள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் என்ன பலன்..? வறுத்த பூண்டு பயன்கள்..!
உடல் எடை குறைய:
உடல் எடையை குறைப்பதற்காக பலவகையான வெயிட் லாஸ் டிப்ஸை பாலோ செய்து எந்த ஒரு நல்ல ரிசல்ட்டும் கிடைக்கலாம் சோர்ந்து போனவர்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது இந்த கருப்பு பூண்டு.
அதாவது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கருப்பு பூண்டை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு கருப்பு பூண்டை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சில நாட்களிலேயே குறைய ஆர்மபிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த கருப்பு பூண்டை வெது வெதுப்பான பாலில் கலந்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் கொடுத்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது:
சர்க்கரை நோயாளிகள் இந்த கருப்பு பூண்டை தினந்தோறும் காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் போதும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளும்.
இளமையுடன் இருக்க:
நீண்ட காலம் இளமையுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். தினமும் சிறிதளவு கருப்பு பூண்டை சாப்பிட்டு வரலாம் இதனால் உங்களை நீங்கள் நீண்ட காலம் வரை இளமையுடன் வைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த கருப்பு பூண்டு உங்கள் ஸ்கினை பளபளப்பாக வைத்துக்கொள்ளும், தோளில் உள்ள சுருக்கங்களை அகற்றும்.
கல்லீரல் பிரச்சனைக்கு:
உடலில் ஏற்படும் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக இந்த கருப்பு பூண்டு உள்ளது. ஆக கல்லீரல் தொடர்பாக பிரச்சனை உள்ளவர்கள் இந்த கருப்பு பூண்டை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வரலாம் இதனால் கல்லீரல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரி ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்
கருப்பு பூண்டு பயன்கள் – Black Garlic Benefits in Tamil:
- குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் இந்த கருப்பு பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
- கருப்பு பூண்டை நாம் சாப்பிடுவதன் மூலம் செல் பாதிப்பைத் தடுக்கும்.
- வயிற்றுப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் ஒவ்வாமையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
- மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |