இரத்தத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Advertisement

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

பொதுவாகவே இன்றைய காலத்தில் இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருகின்றது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கு காரணமே இரும்பு சத்து குறைபாடு தான். உடலில் இரத்தம் குறைந்தால் மூச்சு திணறல், தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரத்தம் குறைவாக இருப்பதை தான் இரத்த சோகை என்று கூறுகிறோம். நம் உடலில் இரத்தத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

இரத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:

ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும். 

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

உங்கள் உடலில் இரத்தம் குறைவாக உள்ளதாய் உணர்த்தும் அறிகுறிகள் !

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

இரத்தத்தை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதனால் ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, பெரிரி, திராட்சை போன்றவை சாப்பிட வேண்டும்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் இரும்பு சத்து குறைவதாலும் இரத்தம் குறைகிறது. அதனால் காய்கறிகள், முட்டை, தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

போலிக் அமிலம:

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

போலிக் அமிலம் என்பது பி காம்ப்லக்ஸ் வைட்டமின் ஆகும். இவை உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க தேவைப்படுகிறது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் ஹீமோகுபிளோபின் அளவு குறையும். அதனால் பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், பிராக்கோலி, ஈரல் போன்றவை சாப்பிட வேண்டும்.

மாதுளை: 

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 

 மாதுளையில்  கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மற்றும் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க  சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.  அதனால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.

பேரிச்சம்பழம்:

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

பேரிச்சம்பழம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரும்புசத்தையும் கொடுக்கிறது. ஒரு நாளைக்கு 3 பேரிச்சபலம் சாப்பிட  வேண்டும். சர்க்கரை நோய் பிரச்சனைகள் இதனை தவிர்ப்பது நல்லது.

பீட்ரூட்:

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

பீட்ரூட்டில் இரும்பு சத்து, பொட்டாசியம், போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. அதனால் தினமும் பீட்ரூட் சாறு குடிக்க வேண்டும்.

பருப்பு வகைகள்:

இரத்தம் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். அவற்றில் உள்ள இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

இயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement