மூளை காய்ச்சல் அறிகுறிகள் | Brain Fever Symptoms in Tamil

Advertisement

மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் | Moolai Kaichal Arikurigal

பொதுநலம் அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்..! இந்த பதிவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் மூளை காய்ச்சலின் அறிகுறிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். மூளைக்காய்ச்சல் என்பது முதுகெலும்பு மற்றும் மூளை பகுதியை சுற்றியுள்ள சவ்வுகளின் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோய் ஆகும். இந்த நோயானது வயதிற்கு ஏற்ப வித்தியாசத்தில் மாற்றம் அடையும். மூளை காய்ச்சலானது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. மூளைக்காய்ச்சலானது பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறிய குழந்தைகள் முதல் வயதில் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் பற்றி  படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

சொரியாசிஸ் அறிகுறிகள்

மூளைக்காய்ச்சல் வகைகள்:

  1. வைரஸ் மூளைக்காய்ச்சல்
  2. பாக்டீரியா மூளைக்காய்ச்சல்
  3. பூஞ்சை மூளைக்காய்ச்சல்
  4. ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சல்
  5. தொற்று அல்லாத மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல் எப்படியெல்லாம் தாக்கும்:

இந்த மூளைக்காய்ச்சல் பிறந்த வீடு, பன்றிகள், புகுந்த வீடு, கொசுக்கள், உறவினர்களின் வீடு, மனிதர்கள், ஒருமுறை பாதிக்கப்பட்ட பன்றியின் ரத்தத்தில் இந்த வைரஸ் கிருமிகள் குறைந்த அளவில் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இவை எண்ணிக்கையில் அதிகரித்து மனிதர்களை தாக்கும்.

வைரஸ் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள்:

மூளைக்காய்ச்சலானது சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது மாறுபட்டு வரும்.

சிறிய குழந்தைகளுக்கு:

  1. பசியின்மை
  2. வயிற்றில் எரிச்சல் ஏற்படுதல்
  3. தூக்கம்
  4. உடல் சோர்வு
  5. காய்ச்சல் அதிகமாகும் போது வேகமாக சுவாசித்தல், அதிகமாக அழுதல், திடீர் அசைவுகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

பெரியவர்களுக்கு: 

  1. அதிக தலைவலி
  2. உடல் காய்ச்சல்
  3. கழுத்து பிடிப்பு ஏற்படுதல்
  4. வலிப்பு நோய்
  5. ஒளியை பார்க்க முடியாத நிலை ஏற்படுதல்
  6. தூக்கம்
  7. உடல்சோர்வு
  8. குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல்
  9. பசி இல்லாத நிலை
சர்க்கரை நோய் அறிகுறிகள்

பாக்டீரியா மூளைக்காய்ச்சல் அறிகுறி:

  1. மனநிலை மாற்றம் அடைந்து இருத்தல்
  2. குமட்டல்/ வாந்தி
  3. வெளிச்சத்தினை பார்க்க முடியாத நிலை உருவாதல்
  4. எரிச்சல்
  5. எப்போதும் தலைவலி
  6. காய்ச்சல்
  7. குளிர்
  8. கழுத்து பிடிப்பு
  9. உடலில் ஆங்காங்கே ஊதா நிறத்தில் தடித்து போய் இருத்தல்.
  10. தூக்கமில்லாததால் உடல் சோர்வு.
நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

பூஞ்சை மூளைக்காய்ச்சல் அறிகுறி:

  1. குமட்டல், வாந்தி
  2. ஒளியை பார்க்க முடியாத நிலை
  3. காய்ச்சல்
  4. தலைவலி
  5. மனதில் எப்போதும் குழப்ப நிலை

ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சல்:

ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சலானது அழுக்கு, மலம், மீன், கோழி போன்ற உணவுப் பொருட்களில் இருக்கும் ஒட்டுண்ணிகள் காரணமாக ஏற்படுகிறது.

புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

தொற்று அல்லாத மூளைக்காய்ச்சல்:

தொற்று நோயில்லாத காரணத்தின் விளைவாகவும் கூட மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.

மூளைகாய்ச்சலின் போது ஏற்படக்கூடியவை:

சிறுநீரக பகுதி செயலிழப்பு, திடீர் அதிர்ச்சி, கற்றல் திறன் குறைபாடுகள், காது கேட்காமல் போதல்,  நினைவக திறன் குறைவாக போதல், கீல்வாதம், மூளை பாதிப்பு, நடை பிரச்சனைகள், மூளை நீர்க்கோர்வை, இறப்பு.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement