மார்பக வலி ஏற்பட காரணம் | Breast Pain Reasons in Tamil

மார்பக வலி காரணம் | Causes of Breast Pain in Tamil

மாறிவரும் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறை காரணமாக உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வயிற்றுவலி, மார்பகவலி போன்றவை வருகின்றன. மார்பகத்தில் வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்னர் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படலாம். வேறு எந்தக் காரணங்களால் மார்பக வலி ஏற்படுகிறது என்பதை விரிவாக படித்தறியலாம் வாங்க.

மார்பக வலி ஏற்பட காரணம்:

மார்பக வலி ஏற்பட காரணம்

 • Breast Pain Reasons in Tamil: மார்பக வலி இரண்டு வகைகளில் ஏற்படுகிறது: சுழற்சி முறை மார்பகவலி, சுழற்சி அற்ற மார்பக வலி.
 • சுழற்சி முறை மார்பக வலியில் இரண்டு பக்கமும் வலி காணப்படும். இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும். இந்த வலி பொதுவாக இளம் வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.
 • சுழற்சி அற்ற மார்பக வலி வயதான பெண்களுக்கு ஏற்படுகிறது. இது மார்பகத்தில் தொடர்ச்சியாக வலியை ஏற்படுத்தும். இந்த வலி இருக்கும் போது நீங்கள் தோள்பட்டை, கை, முதுகு போன்ற பகுதிகளிலும் வலியை உணரலாம்.
 • ஹார்மோன்கள் சமச்சீரற்ற நிலையில் செயல்படும் போது மார்பக வலி ஏற்படலாம். ஒரு பெண் முதல் முறை மாதவிடாய் அடைகிறபொழுது, கர்ப்ப காலத்தில் மற்றும் மாதவிடாய் நிற்கும் வேலைகளில் இந்த மார்பக வலி ஏற்படலாம்.
 • மார்பகத்தில் ஏற்படும் வலி எல்லாம் மார்பக புற்றுநோய் அல்ல. மார்பக புற்றுநோய் வலியை ஏற்படுத்தாது. இந்த வலி எப்போதும் வராமல் ஒரு சில நேரங்களில் மட்டுமே வரும்.

Breast Pain Reasons in Tamil:

Breast Pain Reasons in Tamil

 • மார்பக வலி ஏற்பட காரணம்: பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் மார்பகத்தில் வலி ஏற்படலாம். நீங்கள் கீழே விழுந்து மார்பகத்தில் அடிபட்டு இருந்தால் அதனால் கூட மார்பக வலி ஏற்படலாம்.
 • புகைபிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துகள் போன்றவற்றாலும் கூட மார்பகத்தில் வலி ஏற்படலாம்.
 • மன அழுத்தம் அதிகமாக உள்ள பெண்களுக்கு, மார்பில் ஏற்படும் தொற்று, தசைவலி போன்ற காரணங்களால் மார்பக வலி ஏற்படும். சரியான உள்ளாடை அணியாத பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மாதவிடாய் காலத்தில் மார்பக வலி:

மார்பக வலி ஏற்பட காரணம்

 • Breast Pain Reasons in Tamil: மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும்.
 • இதனால் மார்பகத்தில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து மார்பகத்தில் மாற்றங்களையும் வலியையும் உண்டாக்குகிறது

மார்பக வலி குறைய:

மார்பக வலி குறைய

 • Breast Pain Reasons in Tamil: ஆரோக்கியமான, சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
 • வைட்டமின் ஈ நிறைந்த உணவு வகைகளான சூரியகாந்தி விதைகள், பாதாம், கீரை, மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
 • அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மது, புகைபிடித்தல், போதை மருந்துகள் போன்றவற்றை தவிர்க்கவும்.
 • உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முடியும். அடிக்கடி செய்ய முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்வது நல்லது.
 • இளம் வயதில் உள்ள பெண்கள் உள்ளாடையை சரியாக அணிவது நல்லது. மார்பக வலி வந்தவுடன் அதை பார்த்து பயப்படாமல் உடனடியாக மருத்துவரை அணுகி, அவர் சொல்லும் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.
மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்