Broiler Chicken Side Effects in Tamil
பெரும்பாலனவர்கள் சிக்கனை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் நாட்டு கோழியை விட பிராய்லர் கோழியை தான் அதிகம் விருகம்புகின்றனர். இந்த கோழிகளுக்கு ஹார்மோன் பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன, அவை ஒரு நாளைக்கு 2-3 முட்டைகளை இடுகின்றன. இந்தக் கோழிகளுக்கு ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் அடங்கிய தீங்கு விளைவிக்கும் தொழில்துறை உணவுத் துகள்கள் கொடுக்கப்படுகின்றன. கோழி வேகமாக வளர வளர்ச்சி ஹார்மோன்கள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் இந்த கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறப்பதைத் தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்படுகின்றன. பிராய்லர்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். பிராய்லர் உடலில் என்னன்னே பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
புற்றுநோய்:
பிராய்லர் அதிகமாக சாப்பிடுவது ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
உடல் எடை அதிகரிக்கும்:
பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சியடைய ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழியை சாப்பிடும் உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மைதா மாவில் செய்த உணவை சாப்பிடுவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும்
இதய பிரச்சனை:
பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புகள் உள்ளது. அதனால் இதனை அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சனை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை:
பிராய்லர் கோழியில் உள்ள இரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டு தன்மை ஏற்படுத்தும். பிராய்லர் கோழிக்கு பதிலாக வேற இறைச்சிகளை சாப்பிடலாம்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை:
பெண்கள் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிராய்லர் கோழி கருப்பையில் பிரச்னைகளை ஏற்படுத்தும். பெண்கள் சிறு வயதிலேயே பருவம் அடைந்து விடுகின்றனர். அதனால் பெண்கள் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பிராய்லர் சிக்கனை எப்படி சாப்பிடலாம்:
பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதவாது அதிக எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிட வேண்டும்.
குறைந்தபட்சம் 165˚ F வெப்பநிலையில் கோழியை சமைக்கவும்.
பிராய்லர் கோழி சமைத்ததை மறுநாள் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |