வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதற்கு முன்னாடி இதை தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement

இளநீர் நன்மைகள்

இளநீரை எல்லா காலங்களிலும் குடிப்பார்கள். ஆனால் வெயில் காலத்தில் கொஞ்சம் அதிகமாக குடிப்பார்கள். அதுவும் வெளியில் சென்றால்  போகின்ற இடமெல்லாம் இளநீரை வாங்கி குடிப்போம். காரணம் இதில் உள்ள மினரல்கள் தாகத்தை தணிக்கின்றன. இவற்றில் மேலும் நன்மைகளும் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் தீமைகளும் இருக்கின்றது. அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து இளநீரில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

இளநீர் உள்ள சத்துக்கள்:

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

இளநீர் நன்மைகள்:

உடல் சூடு:

இளநீர் நன்மைகள்

இளநீர் குடிப்பதால் உடல் சூட்டை குறைக்கிறது. வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் நல்ல தீர்வை காணலாம்.

முகப்பரு:

முகபறு வராமல் தடுக்கிறது. சரும பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

சிறுநீர் எரிச்சல்:

இளநீர் நன்மைகள்

உடலில் ஏற்படும் வறட்சியினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்  ஏற்படும். இதனை சரி செய்வதற்கு இளநீர் உதவுகிறது.

முதுமை தோற்றம்:

இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. 

தண்ணீரை வைத்து இப்படியெல்லாம் கூட உடல் எடையை குறைக்கலாமா..? தெரிலைனா தெரிஞ்சுக்கோங்க..!

இரத்தத்தை சுத்தப்படுத்த:

இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்க இளநீர் உதவுகிறது. இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம்.

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது.?

coconut benefits and side effects in tamil

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இளநீர் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இளநீர் அதிகமாக அறிந்த கூடாது. ஏனென்றால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்காது. 

ஒரு நாளைக்கு எதனை இளநீர் குடிக்கலாம்:

 ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிக்க வேண்டும். 250 ml முதல் 300 ml வரை ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும். இதனை விட அதிகமாக குடித்தால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவை அதிகரித்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும். 

இளநீர் குடிக்கும் முறை:

இளநீரை மட்டும் குடிக்காமல் இளநீரில் உள்ள வழுக்கையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement